மேலும் அறிய

Udhayanidhi Stalin: இலங்கை தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கல் எப்போது? பிரதமருக்கு உதயநிதியின் 10 கேள்விகள்

Udhayanidhi Stalin: நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே விமர்சித்து கொண்டிருப்பது ஏன் என பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும்  சூழலில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை வைத்துள்ளார்.

10 கேள்விகள்:

  1. மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
  2. தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
  3. 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது? இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
  4. கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
  5.  ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
  6. அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
  7. அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?
  8. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
  9. வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?
  10. நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? 

Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs LSG Weather: ரசிகர்களே! மழையால் ஹைதராபாத் - லக்னோ போட்டி ரத்தா? வெளியான வானிலை நிலவரம்!
ரசிகர்களே! மழையால் ஹைதராபாத் - லக்னோ போட்டி ரத்தா? வெளியான வானிலை நிலவரம்!
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
TN Rain Alert: குளுகுளு செய்தி! அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை - எந்தெந்த மாவட்டங்களில்?
TN Rain Alert: குளுகுளு செய்தி! அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை - எந்தெந்த மாவட்டங்களில்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Pa Ranjith wish Nanguneri Chinnadurai | சின்னதுரைக்கு பரிசு வழங்கிய பா.ரஞ்சித்!நேரில் அழைத்து பாராட்டுSanju Samson | அப்போ கோலி.. இப்போ சஞ்சு..Umpire அட்ராசிட்டி!கதறும் ரசிகர்கள்Priyanka gandhi slams Modi | ”ராகுல் ராஜாதி ராஜா!அம்பானி, அதானியுடன் டீலா?”மோடிக்கு பிரியங்கா பதிலடிSeeman about Ilayaraja | ”இளையராஜா கேட்டது நியாயம்! நம்ம தப்பா புரிஞ்சுக்கிறோம்” ஆதரவாக பேசிய சீமான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs LSG Weather: ரசிகர்களே! மழையால் ஹைதராபாத் - லக்னோ போட்டி ரத்தா? வெளியான வானிலை நிலவரம்!
ரசிகர்களே! மழையால் ஹைதராபாத் - லக்னோ போட்டி ரத்தா? வெளியான வானிலை நிலவரம்!
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; எரிந்து கருகிய 5000 கோழிகள்
TN Rain Alert: குளுகுளு செய்தி! அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை - எந்தெந்த மாவட்டங்களில்?
TN Rain Alert: குளுகுளு செய்தி! அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை - எந்தெந்த மாவட்டங்களில்?
Lok Sabha Elections 2024: இடி தாக்கியதால் மின் பழுது! விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. செயலிழப்பு!
Lok Sabha Elections 2024: இடி தாக்கியதால் மின் பழுது! விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. செயலிழப்பு!
Watch Video: பூஜை போட வந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து - பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்
Watch Video: பூஜை போட வந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து - பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்
Breaking Tamil LIVE: மதுரையில் பல இடங்களில் பெய்து வரும் மழை
Breaking Tamil LIVE: மதுரையில் பல இடங்களில் பெய்து வரும் மழை
Cinema Headlines: தக் லைஃப் பட சிம்புவின் லுக்.. வசூலில் மாஸ் காண்பிக்கும் அரண்மனை 4.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: தக் லைஃப் பட சிம்புவின் லுக்.. வசூலில் மாஸ் காண்பிக்கும் அரண்மனை 4.. சினிமா செய்திகள் இன்று!
Embed widget