TN Exit Poll 2021 | மண்டலவாரியாக அதிமுக கூட்டணியின் நிலை என்ன?
இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி குழுமமான ABP மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
![TN Exit Poll 2021 | மண்டலவாரியாக அதிமுக கூட்டணியின் நிலை என்ன? TN Exit Poll Results 2021 Abp C-Voter Exit Poll Result Exit Poll Results ADMK TN Exit Poll 2021 | மண்டலவாரியாக அதிமுக கூட்டணியின் நிலை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/29/b8347a12a58ff01f4cb0c1629de97466_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நினைவில் கொண்டால் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்நிலையில் 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி அதிமுக தனது ஹாட்ரிக் வாய்ப்பை இழக்கிறது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளை 8 மண்டலங்களாக பிரித்து டெல்டா மண்டலம், சென்னை மண்டலம், கொங்கு மண்டலம், வட தமிழகம், தென் தமிழகம்,புதுச்சேரியை ஒட்டிய மண்டலம் என பிரிக்கப்படுகிறது.
மண்டலவாரியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, டெல்டா மண்டலத்தில் 7முதல் 9தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றுகிறது. சென்னை மண்டலத்தில் 3முதல் 5 தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் 17-19 தொகுதிகள், வட தமிழகத்தில் 8-10 தொகுதிகள், தென் தமிழகத்தில் 21-23 தொகுதிகள், புதுச்சேரி மண்டலத்தில் 2-4 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது என கணிக்கப்படுகிறது. மொத்தமாக அதிமுக கூட்டணி 58-70 தொகுதிகளை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ஹாட்ரிக் வாய்ப்பை இழக்கும் என ஏபிபி நாட்டின் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.
2016 தேர்தலோடு ஒப்பிட்டால், மண்டலவாரியாக அதிமுக கூட்டணி 2021-இல் பலத்த தோல்வியை சந்திக்கிறது. டெல்டா மண்டலத்தில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 15 தொகுதிகளை அதிமுக இந்த முறை இழக்கிறது. அதேபோல் சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகளும், கொங்கு மண்டலத்தில் 24 தொகுதிகளையும் அதிமுக இழக்கிறது. வட தமிழகத்தில் 13 தொகுதிகளையும், தென் தமிழகத்தில் 10 தொகுதிகளையும், புதுச்சேரி மண்டலத்தில் 6 தொகுதிகளையும் அதிமுக இழக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக 70 தொகுதிகளை இழக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)