Rajya Sabha Election: முடிவானது மாநிலங்களவை தேர்தல் தேதி! தமிழ்நாட்டின் 6 புதிய எம்.பி.க்கள் யார்?
Rajya Sabha Election 2025: தேர்தல் தேதியானது வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைப்பெறும் என்றும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பிக்காளுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவை தேர்தல்:
தமிழகம் மற்றும் அசாமை சேர்ந்த 8 எம்.பிக்களின் பதவி காலம் முடிவடைய உள்ளது, இந்த நிலை இரண்டு மாநிலங்களுக்கு மாநிலங்களவை எம்பிக்காளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அசாமில் வருகிற ஜூன் 14 ஆம் தேதி எம்.பி.க்களுக்கான பதவி காலம் முடிவடைகிறது.அதேப்போல் தமிழ்நாட்டில் ஜூலை 24 ஆம் தேதியுடன் ஆறு எம்.பி.க்களுக்கான பதவி காலம் முடிவடைகிறது
யார் யார் எம்.ப்பிக்கள்?
தற்போது தமிழ்நாட்டில் இருந்து எம்.ஏல்.க்களின் அடிப்படையில் திமுக சார்பில் 6 எம்.பிக்கள் உள்ளனர், இதில் வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகியோர்களின் பதவிக்காலமும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ வயது மூப்பினால் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகவும் இதனால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஏற்கெனவே நாடளுமன்ற தேர்தல் கூட்டணி புரிந்துணர்வின் படி எம்.பி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் சொல்லப்பட்டுவருகிறது.
வேட்பு மனுத்தாக்கல் எப்போது:
இந்த தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி வேட்புமனுத்தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது, வேட்பு மனுக்கான கடைசி தேதி ஜூன் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்ய கடைசி நாள் ஜூன் 10 ஆம் தேதியுடனும் வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் ஜூன் 12 ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எப்போது?
தேர்தல் தேதியானது வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைப்பெறும் என்றும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு பதிவுச்செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்தலை நடத்த தாமதமானால் வரும் ஜூன் 23-க்குள் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.






















