Saranjit Singh Lost: பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2 தொகுதிகளிலும் தோல்வி..!
Punjab Election Result 2022: பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வி.
![Saranjit Singh Lost: பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2 தொகுதிகளிலும் தோல்வி..! Punjab Election Result 2022: Saranjit Singh Sunny CM Candidate Congress Lost Both Constituencies Contested Saranjit Singh Lost: பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2 தொகுதிகளிலும் தோல்வி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/483aadfcc6daca1ccfcb37a75d60ab40_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 117 இடங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 59 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சரண்ஜித் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது தோல்வி அடைந்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளார்களிடம் தோல்வி அடைந்துள்ளார்.
Punjab CM Charanjit Singh Channi trails in Bhadaur (by 22,843 votes) and Chamkaur Sahib (by 2671 votes) as per official EC trends. #PunjabElections2022
— ANI (@ANI) March 10, 2022
(File photo) pic.twitter.com/D5wGn9sGjc
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)