Vikravandi By Election: எங்களுக்கு நம்பிக்கையில்லை.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக!
தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது.
இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம். பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத ரணந்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது. என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விசுரலாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. தற்போது அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தெரிவித்திருக்கிறது. எனவே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக (பாஜக கூட்டணி), நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.