மேலும் அறிய

PM MODI Resignation: தேர்தலில் பெரும்பான்மையை இழந்த பாஜக - பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி

PM MODI Resignation: பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் கடிதம் வழங்கினார்.

PM MODI Resignation: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடி ராஜினாமா:

டெல்லியில் காலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மோடி, தனது தலமையிலான அமைச்சரவையை கலைப்பதாக முடிவை செய்தார்.  அதன்படி தான் வகித்து வந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது மற்றும் தனது தலைமையிலான அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதத்தை, குடியரசு தல்லைவர் திரவுபதி முர்முவிடம் மோடி வழங்கினார். இன்று மாலை 6 மணியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், மோடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெரும்பான்மையை இழந்த பாஜக: 

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. பாஜக சுமார் 240 தொகுதிகளில் முன்னிலை வகித்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், 2014 மற்றும் 2019ம் ஆண்டு தேர்தலை போல தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. இதனால் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் தான், மோடி தான் வகித்து வந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜுன்.8 - மோடி மீண்டும் பதவியேற்பு?

மோடி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக வரும் 7ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து, வரும் 8ம் தேதி மோடி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த இரண்டு முறையை போன்று தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பல முக்கிய அமைச்சர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டியதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

யார் பக்கம் சந்திரபாபு & நிதிஷ்குமார்:

தற்போதைய சூழலில் மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை உறுதி செய்யும் சக்தி, சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரிடம் தான் உள்ளது. இவர்கள் ஆதரவை பொறுத்தே யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிய வரும். கூட்டணி தர்மத்தின்படி, தங்களுக்கு அவர்களது ஆதரவு இருக்கும் என பாஜக கூறி வருகிறது.

அதேநேரம், மாநில அதிகாரத்தை அழிக்கவும், மாநில கட்சிகளை அழிக்கவும் முற்படும் பாஜகவிற்கு சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு அளிக்கக் கூடாது என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அதேநேரம், இந்த இரண்டு தலைவர்களும் எந்த நேரத்திலும் கூட்டணியை மாற்றக் கூடியவர்கள் தான் என்பதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது. எனவே, மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? புதிய பிரதமர் யார் என்ற கேள்வி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
Embed widget