Lok Sabha Election 2024:" நோட்டாவுக்கு பின்னால் பா.ஜ.க. செல்ல வாய்ப்பு" எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு பின்னால் பா.ஜ.க. செல்ல வாய்ப்பு உள்ளது என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் சரவணன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருந்தது, கட்சி நிர்வாகிகள் கருத்து வேறுபட்டால் தோல்வியை சந்தித்து.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்த கேள்விக்கு
அதை மாற்றிக் கொள்ளும் பணியை எடப்பாடி கூறியிருக்கிறார், கடந்த முறை உட்கட்சி மோதல், ஒற்றை தலைமை அதன் காரணமாக சில விளைவுகள் இருந்தன, கடந்த முறை இருந்த விட இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக இருக்கும், திமுகவை எதிர்க்கும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்து உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குகளை பெற்றுத் தர கூட்டணி கட்சிகள் உற்றத் துணையாக இருக்கிறார்கள்.
மதுரையில் மும்முனைப்போட்டி உள்ளது குறித்த கேள்விக்கு
வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அ.தி.மு.க.வா- தி.மு.க.வா என்பதுதான். பாஜக டெபாசிட்டை காப்பாற்றி விட்டால் அதுவே அவர்களுக்கு வெற்றி, பாஜக வளர்வதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது, அதற்கான காரண காரியங்கள் இருக்கிறது-அதற்கான வாய்ப்புகள் இல்லை. பிரதமர் மீது மதிப்பு வைத்திருக்கிறோம் ஆனால் கட்சி என்பது வேறு கொள்கை என்பது வேறு, அதிமுக மற்றும் திமுகவிற்கான மக்கள் அமைப்பு பாஜகவிற்கு இருக்கிறதா? பாஜக புத் கமிட்டியை முழுசாக போட்டு விட்டாலே அது அவர்களுக்கு வெற்றி,
பா.ஜ.க. இரண்டாவது மூன்றாவது அல்லது நோட்டாவுக்கு பின்னால் கூட வரலாம், பாஜக நோட்டாவுக்கு பின்னால் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அண்ணா திமுக 40 தொகுதி என்றாலும் முழுமையாக வந்துவிடும் ஆனால் திமுக தனது கூட்டணி கட்சியை வைத்து முயற்சிப்பார்கள்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை சிலர் விமர்சனம் செய்தார்கள் அதற்கு ஸ்டாலின் நாங்கள்தான் மத்தியில் ஆளப்போகிறோம் எனவே இது சாத்தியம் என்றார் -அதிமுக தேர்தல் அறிக்கை சாத்தியமாகும் என்பது குறித்த கேள்விக்கு
ஸ்டாலின் செல்வது போல் சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை, அம்மா காலத்திலிருந்து சுய உரிமைக்கு குரல் கொடுக்கிற கட்சி, அவர்களுக்கு சாத்தியமாகவதை காட்டிலும் நாங்கள் அம்மாவையே பிரதமராக்குவோம் என்று கணக்கு போட்டோம், இந்திய வரலாற்றில் மைனாரிட்டியை வைத்து பிரதமர் ஆகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு அந்த வாய்ப்பு வந்தாலும் வரக்கூடும்.
அதிமுக தேர்தல் அறிக்கைகள் வலியுறுத்துவோம் என்பது குறித்த கேள்விக்கு
இது நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலின் போது எங்கள் அறிக்கையை பாருங்கள், மத்திய அரசை முழுமையாக கைப்பற்ற முடியாத வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினால் மத்திய அரசிடம் வலியுறுத்தி வெற்றி பெறுவோம், நாங்கள் இப்போது ஆறு சிலிண்டர்கள் கொடுப்போம் என்று கூறினால் அது அதை ஏமாற்றுவதற்கு அர்த்தம் நாங்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.
ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கிறார் அவருக்கு உங்களின் அறிவுரை குறித்த கேள்விக்கு
ஓ.பன்னீர்செல்வம் இந்த நிலைமைக்கு அவர் தான் காரணம் அதற்கு யாரும் குறை சொல்ல முடியாது.
உதயநிதி தேர்தல் பிரச்சாரம் நாளை தொடங்க உள்ளது அதிமுகவின் பிரச்சாரம் எப்போது தொடங்கும் குறித்த கேள்விக்கு
தேர்தலுக்காக அதிமுக பணிகளை தொடங்கி விட்டார்கள், எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் அறிமுகப்படுத்திய பிறகு பிரச்சாரம் தொடங்கும்.
அதிமுக பாஜகவிடம் கள்ள கூட்டணி வைத்துள்ளது என்று தமிழக முதல்வர் குறித்த கேள்விக்கு
திமுகவிற்கு பொறாமை அதிமுக பாஜக கூட்டணி விட்டு வெளியேறி விட்டது என்ற பொறாமையிலே அவர் கூறியிருக்கிறார். ஸ்டாலின் அறியாமையில் சொல்கிறார் மக்கள் அதை நம்ப தயாராக இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் பலவீனமாகிவிட்டதால் அதிமுகவை கள்ள கூட்டணி என்று சொல்கிறார் என்றார்.