மேலும் அறிய
Advertisement
Model Code of Conduct: வேட்பாளர்களே ஜாக்கிரதை: அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்; என்ன செய்யலாம், கூடாது?
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
- அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும்.
- 50,000 ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலேயோ தாக்குதலில் ஈடுபடக்கூடாது.
- விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்க கூடாது.
குழந்தைகளுக்கு பிரச்சாரத்தில் அனுமதி இல்லை
- தேர்தல் பரப்புரையில் சிறார்களை பயன்படுத்தக்கூடாது.
- தன்னார்வலர்கள், ஒப்பந்தப் பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
- மாநில எல்லைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
- வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கபடும்.
- முன் கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் கண்காணிக்கப்படும்.
- பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
கடும் நடவடிக்கை பாயும்
- பணம், பொருள்கள், மது விநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்யலாம். ஆனால் போலி செய்திகளைப் பரப்பக் கூடாது.
- சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாயும்.
- அரசியல் கட்சிகள் தங்கள் சமூக வலைதள பக்கங்களை கவனமாக கையாள வேண்டும்.
இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion