கரூரில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுகிறார்?; தொண்டர்களால் குழப்பத்தில் வாக்காளர்கள்
பேங்க்.சுப்ரமணியன் தனது ஆதரவாளர்களை திரட்டி ஜோதிமணிக்கு சீட் வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய எம்.பி ஜோதிமணி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன் ஆகியோரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு கேட்டு வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போதைய எம்.பியாக இருப்பவர் செல்வி.ஜோதிமணி. முன்னாள் மாவட்ட தலைவராக இருந்தவர் பேங்க்.சுப்ரமணியன். இவர் கடந்த மாதம் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டி ஜோதிமணிக்கு சீட் வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை அடுத்து, பேங்க் சுப்ரமணியனுக்கு அகில இந்திய விவசாய அணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபோது தலைமை யாரை அறிவிக்கிறதோ அவருக்கு வேலை பார்ப்பதாக அறிவித்தார். மேலும், தனக்கு எம்.பி சீட் கொடுத்தால் போட்டியிடுவேன் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில் வெற்றி வேட்பாளர் ஜோதிமணி என்று அவரது ஆதரவாளர்களும், பேங்க் சுப்ரமணியன் ஆதரவாளர்கள் வெற்றி வேட்பாளர் பேங்க் சுப்ரமணியன் என அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் போஸ்ட் போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் குளப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

