DMK Candidate List: அதிரடி மாற்றங்கள்.. திமுகவின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான்!
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் திமுக களம் காண இருக்கும் 21 தொகுதிகளின் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
DMK Candidate List: பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் பட்டியில் வெளியாகி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் குறித்த தகவல், ஏ.பி.பி. நாடு செய்தி தளத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. இதோ அந்தப் பட்டியல்..,
திமுக வேட்பாளர்கள் உத்தேசப் பட்டியல்:
வ.எண் | தொகுதி விவரம் | வேட்பாளர் பெயர் |
1. | வட சென்னை | கலாநிதி வீராசாமி |
2 | மத்திய சென்னை | தயாநிதி மாறன் |
3 | தென் சென்னை | தமிழச்சி தங்கபாண்டியன் |
4 | ஸ்ரீபெரும்புதூர் | டி.ஆர். பாலு |
5 | காஞ்சிபுரம் | க. செல்வம் |
6 | அரக்கோணம் | ஜெகத்ரட்சகன் |
7 | திருவண்ணாமலை | சி.என். அண்ணாதுரை |
8 | ஆரணி | தரணி வேந்தன் |
9 | வேலூர் | கதிர் ஆனந்த் |
10 | பெரம்பலூர் | அருண் நேரு |
11 | ஈரோடு | பிரகாஷ் |
12 | நீலகிரி | ஆ. ராசா |
13 | பொள்ளாச்சி | சண்முகசுந்தரம் |
14 | தூத்துக்குடி | கனிமொழி |
15 | கோவை | மகேந்திரன் (அ) டாக்டர் கோகுல் (அ) கார்த்திக் |
16 | தேனி | இம்ரான் ஆருண் (அ) தங்க தமிழ்ச்செல்வன் |
17 | தஞ்சாவூர் |
டாக்டர் அஞ்சுகம் பூபதி (அ) எஸ்.எஸ். பழனிமாணிக்கம் |
18 | தென்காசி | தனுஷ் எம். குமார் (அ) டாக்டர் ராணி |
19 | தருமபுரி |
டாக்டர் செந்தில்குமார் (அ) ஆ. மணி |
20 | கள்ளக்குறிச்சி | சிவலிங்கம் (அ) கவுதம சிகாமணி |
21 | சேலம் | பி.கே. பாபு (அ) செல்வகணபதி |
கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், கோவை, தஞ்சாவூர், தென்காசி, தேனி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த ஏழு தொகுதிகளில் மட்டும் இன்று (18.03.2024) இரவிற்குள் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
மற்ற தொகுதிகளில் கிட்டதட்ட தி.மு.க. வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அண்ணா அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டதட்ட 13 தொகுதிகளில் தற்போது எம்.பி.-யாக உள்ளவர்களே மீண்டும் தி.மு.க. வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது. இறுதிச் செய்யப்பட்ட பட்டியல், இன்று (18.03.2024) இரவு அல்லது நாளை பிற்பகலுக்குள் அதிகாரப்பூர்வமாக தி.மு.க. சார்பில் வெளியிடப்படும்.
தி.மு.க. தலைமையில் தமிழகத்தில் களமிறங்கும் கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இன்னும் ஓரிரு தினங்களில் காங்கிரஸ் கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.