மேலும் அறிய
Advertisement
மதுரையின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என துணை மேயர் பேட்டி !
மதுரை மாநகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியின்றி தேர்வு - துணைமேயராக பதவி ஏற்பு - பதவியேற்பின் போது கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க என முழக்கமிட்ட எம்.பி.
1971ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வரும் மதுரை தற்போது 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த மதுரை முத்து 1980ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தார். இறுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு மூலம் அதிமுகவை சேர்ந்த வி.வி.ராஜன் செல்லப்பா மேயரானார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரை மாநகராட்சியில் வாக்குபதிவு நடந்து முடிந்துள்ளது.
அப்போது மாமன்ற கூட்டத்தில் அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்க கம்யூனிஸ்ட் என முழக்கமிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில்...,” மதுரை மாநகராட்சியின் துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவியை ஒதுக்கியமைக்கும், மதுரை மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி எனவும், மக்களுக்கான சேவையை தொடர்வோம்” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைமேயர் நாகராஜன் பேசுகையில்..,” மதுரையின் உட்கட்டமைப்பிற்கான 27கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரிடம் வழங்கியதையடுத்து மதுரையின் உட்கட்டமைப்பு வசதிக்காக 500கோடி ரூபாய் ஒதுக்கூட செய்த முதல்வருக்கு, தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக மதுரை மாநகராட்சியை உருவாக்க பாடுபடுவோம் என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தவறான திசையில் சென்ற திமுகவின் பிம்பம் இன்று தெளிவடைந்துள்ளது - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion