Gujarat Exit Poll 2024: பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வெற்றி பெறுமா பா.ஜ.க.?; ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு
Lok Sabha Election Exit Poll Results 2024 Gujarat: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மக்களவைத் தேர்தல் வெற்றி பெற யாருக்கு வாய்ப்புள்ளது? என்று ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
ABP Cvoter Exit Poll Result 2024: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, இன்று மாலை 6 மணியுடன் 7 கட்ட தேர்தலும் நிறைவு பெற்றது. இந்த சூழலில், ஏபிபி – சி வோட்டரில் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
குஜராத்தில் யார் ஆதிக்கம்?
நாட்டின் ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது? என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் தற்போது பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. ஏபிபி – சி வோட்டரின் கருத்துக்கணிப்பின்படி, குஜராத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வே ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Exit Poll Results 2024 LIVE: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் உண்மையை சொல்ல வேண்டும் - கார்கே
அதாவது, மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 25 முதல் 26 தொகுதிகளில் பா.ஜ.க.வே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை குஜராத்தில் வெறும் 0 முதல் 1 தொகுதி வரை மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரியவந்துள்ளது.
பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி:
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டு பார்த்தால், குஜராத்தைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டணி 34.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் என்றும், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 62 சதவீத வாக்குகள் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்ற கட்சிகள் 3.1 சதவீத வாக்குகள் பெறும் என்று தெரியவந்துள்ளது.
பா.ஜ.க.வின் பலமான மாநிலங்களில் ஒன்றான குஜராத் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் ஆகும். கடந்த 25 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க.வே கோலோச்சி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏபிபி சி வோட்டரின் மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்பின்படி, மத்தியில் மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Exit Polls 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? எப்படி நடக்கிறது? முழு விவரம்