Exit Polls 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? எப்படி நடக்கிறது? முழு விவரம்
7வது கட்டமான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இந்த நிலையில் நாளை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? என்பதை கீழே காணலாம்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்டத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்டமான 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவு பெற்ற பிறகு, ஏபிபி – சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று வெளியாகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேர்தலுக்கான வாக்குப்பதிவு முழுவதும் நிறைவடைந்த பிறகு வெளியாகும் கருத்துக்கணிப்பு ஆகும். தற்போதைய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சூழலில், 7 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பிறகு வெளியாவதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்தெந்த கட்சிகள்? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? என்பதே ஆகும். இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் இருந்து பெரும்பாலும் மாறுபட்டே வரும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது எப்படி?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது பல தொகுதிகளில் வாக்காளர்களின் மனநிலையை சேகரிப்பது ஆகும். அதாவது, வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு வாக்களித்த வாக்காளர்களிடம் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்பதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும். இந்த கருத்துக்கணிப்பில் கருத்து கூறியவர்களின் ரகசியம் காக்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
தேர்தல் தொடர்பான ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பையும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் படி வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்பானது தொடங்கி அதன் கடைசி கட்டம் முடியும் வரை ஒளிபரப்பாகக் கூடாது.
அதேபோங, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி 126 ஏ போன்ற பல விதிகளின்படி, வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எந்தவொரு கருத்துக்கணிப்பையும் அச்சு, மின்னணு மற்றும் வேறு வகை ஊடகங்கள் வழியாக வெளியிடவோ அல்லது விளம்பரப்படுத்தவோ யாருக்கும் அனுமதி இல்லை.
எப்போது முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடக்கிறது?
நாட்டில் முதன்முறையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 1957ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனாலும், 1980ம் ஆண்டு முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நாட்டில் மிகவும் பிரபலமாக அமைந்தது. அதற்கு காரணம் இந்தியாவில் அப்போதுதான் தொலைக்காட்சி அதிகளவில் பிரபலம் ஆகிறது.