மேலும் அறிய

ABP-CVoter Exit Poll 2024 LIVE: மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக; சொன்னதைச் செய்த பிரதமர் மோடி?

ABP-CVoter Exit Poll 2024 Live Updates: மக்களவைத் தேர்தலின் வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ABP - C Voter வெளியிடவுள்ள நிலையில் ABP Nadu வலைதளத்தில் நேரலையில் காணலாம்

Key Events
Exit Poll Results 2024 LIVE Updates Lok Sabha Election ABP CVoter Exit Poll Result Tamil Nadu India General Election Who Will Win ABP-CVoter Exit Poll 2024 LIVE: மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக; சொன்னதைச் செய்த பிரதமர் மோடி?
வெளியானது கருத்துக்கணிப்பு முடிவு

Background

ABP-CVoter Lok Sabha Elections Exit Poll LIVE Result 2024

இந்தியாவில், 18வது மக்களவை தேர்தலுக்கான  வாக்குப்பதிவு  இன்று நிறைவுபெற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகயுள்ளன. ABP - சி வோட்டர் இணைந்து நடத்திய இந்த கருத்து கணிப்பு முடிவுகளின்படி(ABP CVoter Exit Poll Results), யாருக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.

கருத்து கணிப்பு:

ABP-Cvoter கருத்து கணிப்பானது, நாட்டின் மிகத் துல்லியமான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 542 தொகுதிகள் பற்றிய விரிவான தகவல்களை ABP-CVoter நடத்தும் கருத்துக்கணிப்பு உங்களுக்கு வழங்குகிறது.

மக்களவைத் தேர்தல்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக பார்க்கப்படும் இந்தியாவில் மக்களவை தேர்தலானது, கடந்த ஏப்ரல் மாதம் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியான இன்று வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 542 மக்களவைத் தொகுதிகளுக்கான,  தேர்தலின் முடிவுகளானது, வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4 ஆம் தேதி தெரியவரும். 

இத்தேர்தல் முடிவுக்காக, இந்தியா நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 2024 மக்களவை தேர்தலில் 8,360 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்க 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தினர்.    

இந்நிலையில், இன்றுடன் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் முடிவு குறித்தான கருத்து கணிப்புகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிடுகிறது.

கடுமையான போட்டி:

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே ஆளும் பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி இடையேயான மோதல் தீவிரமாக இருந்தது. தங்களது கூட்டணி வந்தால் என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்படும், நாட்டின் வளர்ச்சிக்கான கைவசம் உள்ள திட்டங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

அதற்கும் மேலாக மதம் தொடர்பான பேச்சுக்களும் தேர்தலில் அதிகம் காணப்பட்டன. இந்நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலின், கடைசி கட்ட வாக்குப்பதிவான இன்று மாலை 6 மணியளவில் முடிகிறது.

தொடர் நேரலை:

இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிடவுள்ளன.

இந்திய அளவில் யார் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது என்றும், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்தான கணிப்புகளை ஏபிபி – சி வோட்டர் இணைந்து வெளியிடவுள்ளன.

நட்சத்திர வேட்பாளர்கள் யாருக்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்பு முடிவுகள் என்ன சொல்கிறது என்பது குறித்தும் பார்ப்போம்.

மேலும் மக்களவை தேர்தல், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு குறித்தான கூடுதல் மற்றும் விரிவான தகவல்களை ஏப்பி நாடு ABP Nadu வலைதளத்தில் நேரடியாக வழங்க இருக்கிறோம். அதற்கு, தொடர்ந்து இணைந்திருங்கள், இந்த நேரலை பக்கத்தில்.

20:26 PM (IST)  •  01 Jun 2024

பிரதமர் அரியணையில் மோடி ஹாட்ரிக்! ஏபிபி சி வோட்டர் கணிப்பால் பா.ஜ.க. தொண்டர்கள் குஷி!

இந்தியாவை தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஏபிபி சி வோட்டர் கணித்துள்ளது.

20:21 PM (IST)  •  01 Jun 2024

ABP Cvoter Exit Poll Result 2024 LIVE: அசுர பலத்துடன் ஆட்சியைமக்கப் போகும் பா.ஜ.க. - ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 353 முதல் 383 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் கணித்துள்ளது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Volvo EX60 with Gemini AI: இப்போ காரோட பேசிட்டே போகலாம்! கூகுள் ஜெமினி ஏஐ உடன் வால்வோ EV SUV; யம்மா.! இவ்வளவு ரேஞ்சா.?
இப்போ காரோட பேசிட்டே போகலாம்! கூகுள் ஜெமினி ஏஐ உடன் வால்வோ EV SUV; யம்மா.! இவ்வளவு ரேஞ்சா.?
Embed widget