Erode East By Election Result: எகிறி அடித்த திமுக! டெபாசிட் வாங்காத நாம் தமிழர்!. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Erode East By Election Result 2025: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஏழாம் சுற்று முடிவுகள் :
ஈரோடு கிழக்கு முன்னிலை நிலவரம் - 38,000 மேற்ப்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றது
ஆறாம் சுற்று முடிவுகள்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆறாம் சுற்று முடிவில் திமுக 43427 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 9152 வாக்குகளை பெற்றார்.
ஐந்தாம் சுற்று முடிவுகள்:
ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் முன்னிலை பெற்றார். அந்த சுற்றில் அவர் 36880 வாக்குகளையும், நாதக வேட்பாளர் 7668 வாக்குகள் பெற்றார்.
நான்காம் சுற்று முடிவுகள்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நான்காம் சுற்று முடிவுகளில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 30657 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 6014 வாக்குகளை பெற்றார்.
மூன்றாம் சுற்று முடிவுகள்:
ஈரோடு இடைத்தேர்தல் மூன்றாவது சுற்றின் முடிவில் திமுக : 22,682 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 4020 வாக்குகளும் பெற்றுள்ளது. திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இரண்டாம் சுற்று முடிவுகள்:
இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் முன்னிலை பெற்றார். அந்த சுற்றில் அவர் 11,797 வாக்குகளையும், நாதக வேட்பாளர் 2,056 வாக்குகள் பெற்றார்.
முதல் சுற்று:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவுகளில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 7837 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகளை பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானததைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற முன்னணி கட்சிகளுடன் அறிமுக கட்சியான விஜய்யின் த.வெ.க.வும் இந்த தேர்தலை புறக்கணித்தது. தி.மு.க. - நாம் தமிழர் கட்சிகள் என இருமுனை போட்டு நிலவின. இந்த தேர்தலில் மொத்தம் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியது. மொத்தம் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகளில் இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை:
இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சரியாக இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடைப்பெற்றது இதில் திமுக வேட்பாளரே முன்னிலையில் பெற்றார்.
இதையும் படிங்க: Erode East By Election Result LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்.. முதல் சுற்றில் திமுக முன்னிலை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

