Erode East By Election: இந்த முறையும் மகளிருக்கே வாய்ப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த சீமான்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கண்மணி என்கிற மேனகா நவநீதன் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கட்சிகள் நிலைப்பாடு:
ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. தி.மு.க. கூட்டணியில் அந்த தொகுதியில் ஏற்கனவே உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை கொடுத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக உயிரிழந்த எம்.எல்.ஏ. ஈ.வெ.ரா. திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனே போட்டியிடுகிறார்.
ஆனால், அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதிமுக, ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு அணியாக உள்ளதால், பாஜக யாருக்கு ஆதரவு என குழப்பத்தில் உள்ளது.
தேமுதிக, அமமுக கட்சிகள் தனித்து போட்டியிடப்படுவதாக அறிவித்துள்ள நிலையில்,வேட்பாளர்களையும் அறிவித்து விட்டனர். மேலும் பா.ம.க, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடமாட்டோம் என அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியானது, திமுக கூட்டணியில் உள்ள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து விட்டது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்:
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளராக மேனகா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கண்மணி என்கிற மேனகா நவநீதன் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கடந்த முறை நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திமுக, அதிமுகவையடுத்து மூன்றாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.