TN Local Body Election: உள்ளாட்சித் தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டி - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2,981 பதவியிடங்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 14, 571 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக, “தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபார் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி முடிவடையும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.செப்டம்பர் 25ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறலாம். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பணியாளர் பற்றாக்குறை, நிர்வாக காரணங்களால் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 40,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியிருந்தார்.
உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: சென்னைக்கு மிக மிக அருகில் ‛செங்கல்பட்டு... எங்கள் பட்டு’ அள்ளப்போவது யார்?@arivalayam @AIADMKOfficial @maiamofficial @BJP4TamilNadu @INCTamilNadu
— ABP Nadu (@abpnadu) September 21, 2021
#LocalBodyElection #TamilNadu #Chengalpattu #Candidate #District #Newshttps://t.co/YRd5PP5IOs
உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கப் போவது யார்? A to Z களநிலவரம்!@arivalayam @AIADMKOfficial @maiamofficial @BJP4TamilNadu @INCTamilNadu #LocalBodyElection #TamilNadu #Kanchipuram #Candidate #District #Newshttps://t.co/x7pqUmIRKn
— ABP Nadu (@abpnadu) September 20, 2021