TN TET 2025: சூப்பர் செய்தி; டெட் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போ வரை?
டெட் தேர்வுக்கு தேர்வர்கள், செப்டம்பர் 10ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி தேர்வர்கள், செப்டம்பர் 10ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற, தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசுப் பள்ளிகளில் சேர தனியாக நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அரசுகள் தனித் தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்கின்றன.
அந்த வகையில் தமிழக அரசு நடத்தும் டிஎன்டெட் தகுதித் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (செப். 8) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான இன்று ஆசிரியர் தேர்வு வாரிய முகவரி முடங்கியது. இதனால், தேர்வர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.























