SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை!
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டுத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். 11ஆம் நாளாகத் தலைநகர் சென்னையில் போராட்டம் நடந்து வரும் சூழலில், பேச்சுவார்த்தையில் நல்ல செய்தி வரும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநருடன் பேச்சுவார்த்தை
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவின்படி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரது முன்னிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 நண்பகல் 12.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.






















