மேலும் அறிய

ராணுவப்பள்ளியில் சிறுவர்கள் பயில்வதற்கான விண்ணப்பம் வெளியீடு - வரும் டிச.18ஆம் தேதியில் தேர்வு

’’சென்னையில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது’’

இந்திய ராணுவ கல்லூரியில் படிக்க சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2022 பருவத்தில் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சென்னையில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வானது எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வாக நடைபெறும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு கொண்டது. கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தேர்வு தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்க வேண்டும். நேர்முக தேர்வானது விண்ணப்பத்தாரர்களின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். நேர்முக தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ராணுவப்பள்ளியில் சிறுவர்கள் பயில்வதற்கான விண்ணப்பம் வெளியீடு - வரும் டிச.18ஆம் தேதியில் தேர்வு

ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற குறைந்தபட்ச மதிப்பெண் 50 சதவீதம் ஆகும். இத்தேர்வுக்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பு மற்றும் முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகாண்ட், டேராடூன், உத்ரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண்- 248 003 என்ற முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து. கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன் கேட்பு காசோலைக்குரிய கிளை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, டெல்பவன், டேராடுன், வங்கி குறியீடு-01576, உத்தரகண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் 600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் 555-க்கான கேட்புக்காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.rimc.gov.in என்ற ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணையதளம் மூலமாக பொதுப் பிரிவினர் 600,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் 555 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியவை சென்னையில் உள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும். தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும்.

ராணுவப்பள்ளியில் சிறுவர்கள் பயில்வதற்கான விண்ணப்பம் வெளியீடு - வரும் டிச.18ஆம் தேதியில் தேர்வு

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 1-7-2022 ஆம் தேதியன்று 11 அல்லது 12 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-7-2009-ஆம்  தேதிக்கு முன்னதாகவும், 1-1-2011 ஆம் தேதிக்கு பின்னதாக பிறந்திருக்கக்கூடாது. கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது 1-7-2022-ல் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிப்பவராகவும் அல்லது 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை- 600 003, என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களை www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget