மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க... உயர்கல்வி கனவை நனவாக்கும் "என் கல்லூரி கனவு" நிகழ்ச்சி... எங்கே? எப்போது?
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த ஆலோசனை நிகழ்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஏப்ரல் 6-ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறுகிறது.
உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், "என் கல்லூரி கனவு" எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 6, 2025 அன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.
நீட் தேர்வை எழுத உள்ள புதுக்கோட்டை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
பெற்றோர்களுடன் கலந்துகொள்ள அழைப்பு
இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், தங்கள் பெற்றோருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தங்கள் EMIS அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- இதைப் பாருங்க!
கல்வியாளர்களின் கருத்து
- 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு, மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியமான தருணம் இது.
- இந்த நேரத்தில், சரியான உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
- "என் கல்லூரி கனவு" போன்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு சரியான திசைகாட்டும் வகையில் அமையும்.
- நிபுணர்களின் ஆலோசனை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.
Ghibli Art Image: ஜிப்லி போட்டோவை இலவசமாக உருவாக்குவது எப்படி? கத்துகோங்க அப்புறம் கலக்குங்க..!
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் அம்சங்கள்
- மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்கள் வழங்கப்படும்.
- மாணவர்களின் திறமை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
- பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்களும், அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
- மாணவர்களின் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம்.






















