போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாணவர்களின் ஒத்துழைப்பு முக்கியம் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரி
போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்து வருகிறார்கள், இவற்றை தடுக்க நம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு பேச்சு
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்களிடையே இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் சோதனையை மேற்கொண்டபோது ,அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வி துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புகுழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையம் காமினி, மாவட்ட கல்விதுறை அலுவலர்கள், உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு , 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு கூறியது..
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கபட்டுள்ளனர்.
குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அரசால் தடை செய்யபட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளோம். பலர் கடைகளுக்கு சீல் வைக்கபட்டுள்ளது. ஆனால் இன்னமும் பல இடங்களில் பான் மசலா, குட்கா, புகையிலை உள்ளிட போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைதையும் தடுக்க மாவட்ட நிர்வாக சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை
போதைப்பொருள் பயன்படுத்துவதால் புற்றுநோயால் பாதிக்கபட்டு பலர் இறந்து விட்டனர். ஆகையால் தொடர்ந்து போதைப்பொருளால் ஏற்படும் தீமைகளை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
குறிப்பாக போதைப்பொருள் எதிராக அரசு அதிகாரிகள் மட்டும் நடவடிக்கைகள் எடுத்தால் போதாது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசியர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார்.
திருச்சி மாவட்டத்தில் தெரு ஓரம் கடைகள், உள்ளிட இந்த இடமாக இருந்தாலும் அரசால் தடை செய்யபட்ட போதைப்பொருள் விற்பனை செய்தால் உடனடியாக மாணவர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
போதைப்பொருளால் சீர் அழியும் மக்களை காப்பாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.