மேலும் அறிய

மின்வாரியத்தில் வேலை; 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி- அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மனைவி தங்கமயில் (வயது 41). இவருடைய தந்தை கலியமூர்த்தி திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிசெய்து, கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சங்கரன் (51) என்பவர் பழக்கமானார். இவர், கடந்த 22.3.2019 அன்று கலியமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவரிடம், தற்போது மின்சார வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் வேலை காலிப் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலருடன் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக தங்களுக்கு கீழ் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு மின்வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய கலியமூர்த்தி மற்றும் அவரது கீழ் பணிபுரியும் 40 பேர்களிடம் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதமும், 18 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதமும் ஆக மொத்தம் ரூ.94 லட்சத்து 50 ஆயிரத்தை சங்கரன் பெற்றார். ஆனால், பல மாதங்களாகியும் மேற்கண்ட நபர்களுக்கு சங்கரன், வேலை ஏதும் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு கலியமூர்த்தி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு சங்கரன், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை வந்துவிடும் என்று கூறினார்.

ஆனால், வேலை ஏதும் கிடைக்கவில்லை. இந்த சூழலில், 22.2.2021 அன்று மின்சார வாரியத்தில் இருந்த காலிப் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டதை அறிந்த மேற்கண்ட நபர்கள், சங்கரனிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி பிரச்சினை செய்தனர். அதன் பின்னர் பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் சங்கரன் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.70 லட்சத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தனர். இம்மனுவை பெற்ற அவர், அதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து, உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில், சங்கரன் மீது ஏமாற்றும் நோக்கம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இருதயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில், நேற்றிரவு சங்கரனை போலீசார் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைதான சங்கரன் தற்போது சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தநிலையில் ஆசிரியர் சங்கரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?
Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Trichy Siva:திமுகவின் மூத்த தலைவர்! நாடாளுமன்ற சிறந்த பேச்சாளர்... யார் இந்த திருச்சி சிவா? குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?
Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
CP Radhakrishnan: கொங்கு மைந்தர், 16 வயதில் ஆர்எஸ்எஸ், தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.பி.- யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
Car Price Reduce: தாறுமாறா குறையப்போகும் கார்கள் விலை.. இத்தனை ஆயிரமா? எந்தெந்த கார்கள்?
Car Price Reduce: தாறுமாறா குறையப்போகும் கார்கள் விலை.. இத்தனை ஆயிரமா? எந்தெந்த கார்கள்?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
Group 2 Exam: குரூப் 2, 2ஏ தேர்வு; டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு- தவறினால் வாய்ப்பில்லை! என்னதுங்க?
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
‘உறுப்பினர் சேர்க்கையில் Cheating?’ காதர்பாட்சா மு.ரா மீது முதல்வர் அதிருப்தி..!
Embed widget