மேலும் அறிய

Coolie Box Office: ரூ.400 கோடியை கடந்த கூலி.. இந்தியாவில் எத்தனை கோடி? தமிழில் எத்தனை கோடி வசூல்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் உலகளவில் 404 கோடி ரூபாய் வசூல் குவித்துள்ள நிலையில், இந்தியாவில் எத்தனை கோடி என்பதை காணலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கூலி திரைப்படம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 14ம் தேதி வெளியான இந்த படம் சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறையால் 404 கோடி ரூபாய் வரை வசூலில் குவித்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கூலி படத்தின் இந்த வசூல் உலகம் முழுவதும் சேர்த்து ஆகும். இந்தியாவில் மட்டும் கூலி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை காணலாம். தொடர் விடுமுறை முடிந்து திங்கள் கிழமையான நேற்று வேலை நாள் என்பதால் பொதுவாக எந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாக காணப்படும். 

கூலி வசூல் எவ்வளவு?

கூலி படத்திற்கு ஓரளவு கூட்டம் நேற்று காணப்பட்டது. கூலி படம் முதல் நாள் 65 கோடியும், 2வது நாள் 54.75 கோடி ரூபாயும், 3வது நாள் 39.50 கோடி ரூபாயும், 4வது நாள் ரூ.35 கோடியும் வசூல் செய்த நிலையில், திங்கள்கிழமையான நேற்று ரூபாய் 12 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூபாய் 206.50 கோடி ரூபாய் வசூலை கூலி படம் குவித்துள்ளது.

தமிழில் மட்டும் முதல் நாள் ரூ.44.5 கோடியும், 2வது நாள் 34.5 கோடி ரூபாயும், 3வது நாள் ரூபாய் 25.75 கோடியும், 4வது நாள் ரூ. 23.3 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. திங்கள்கிழமை தமிழில் மட்டும் எந்தளவு வசூல் என்ற விவரம் வெளியாகவில்லை. தமிழுக்கு அடுத்தபடியாக தெலுங்கில் நல்ல வசூலை கூலி படம் குவித்துள்ளது. அதற்கு நாகர்ஜுனா முக்கிய காரணமாக உள்ளார்.

5வது நாளில் எப்படி?

5வது நாளான நேற்று காலை காட்சிக்கு 23.58 சதவீதமும், மதிய காட்சிக்கு 29.31 சதவீதமும், மாலை காட்சிக்கு 38 சதவீதமும், இரவுக்காட்சிக்கு 37 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது. தமிழ்நாட்டில் நேற்று சென்னையில் கூலி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் 50 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சியாகவே கூலி திரையிடப்பட்டது. 

திருச்சியில் 49.50 சதவீதமும், திண்டுக்கல்லில் 47.25 சதவீதமும், கோவையில் 39.75 சதவீதமும், மதுரையில் 26.50 சதவீதமும், சேலத்தில் 31.75 சதவீதமும், வேலூரில் 28 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக கூலி ஓடியது. இந்தியிலும் கூலி படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. 

திங்கள்கிழமையான நேற்று கூலி படம் ஹைதரபாத்தில் இந்தியில் 41 சதவீதம் அரங்குகள் நிறைந்த காட்சியாக ஓடியது. பெங்களூரிலும் இந்தியில் 30.25 சதவீதம் நிறைந்த காட்சியாக ஓடியது. சென்னையிலே இந்தியில் வெளியான கூலி படத்தை 29 சதவீதம் ரசிகர்கள் பார்த்தனர்.

வெளிநாட்டிலும் வசூல்:

ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என வெளிநாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் இதுபோன்று பெரிய நடிகர்களின் திரைப்படங்களை ஆர்வத்துடன் சென்று பார்ப்பது வழக்கம் ஆகும். ரஜினி படம் என்றால் மிகுந்த ஆர்வத்துடன் சென்று பார்ப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் கூலி படத்தையும் ரசிகர்கள் வெளிநாட்டில் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget