மேலும் அறிய

Crime: துணிகளை கிழித்து ஊசியால் குத்துவார்.. கணவரின் கொடுமையை மரண வாக்குமூலத்தில் சொன்ன இளம்பெண்!

கணவர் அடித்து இரவும் முழுவதும் டார்ச்சர் செய்வதாகவும் துணிகளை கிழித்து ஊசியால் குத்தி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மனோன்மணி (29), கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். தண்ணீர் லாரி உரிமையாளராான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்திலேயே குடும்ப தகராறு காரணமாக மனோன்மணி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டு, கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதால் இனி கணவனுடன் வாழ மாட்டேன் என்று கூறி பெற்றோர்களுடன் இருந்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோர்கள் விசாரித்தபோது இரவு நேரங்களில் தூங்கவிடாமல் அடித்து டார்ச்சர் செய்ததாகவும் துணிகளை கிழித்து ஊசியால் தினசரி குத்தி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து மனோன்மணி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Crime: துணிகளை கிழித்து ஊசியால் குத்துவார்.. கணவரின் கொடுமையை மரண வாக்குமூலத்தில் சொன்ன இளம்பெண்!

இந்த நிலையில் நேற்று மாலை பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சைக்காக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் மனோன்மணியம் சகோதரர் செல்போன் மூலமாக மனோன்மணியின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அதில் கணவர் அடித்து இரவும் முழுவதும் டார்ச்சர் செய்வதாகவும் துணிகளை கிழித்து ஊசியால் குத்தி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மது குடித்துவிட்டு வந்து இரவு முழுவதும் தூங்காமல் அடித்து சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார். மேலும் மனோன்மணி நேற்று இரவு அரசு மருத்துவமனையில் சுயநினைவு இருந்தபோது நீதிபதிக்கு முன்னால் இறுதி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Crime: துணிகளை கிழித்து ஊசியால் குத்துவார்.. கணவரின் கொடுமையை மரண வாக்குமூலத்தில் சொன்ன இளம்பெண்!

இது தொடர்பாக இறந்த மனோன்மணியின் தந்தை ராமசாமி கூறுகையில், திருமணமான இரண்டு மாதத்தில் பலமுறை அடித்து கொடுமைப்படுத்தி தாகவும் மேலும் நகை கேட்டு அடித்து விரட்டியதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் என் மகளுக்கு நிகழ்ந்த கொடுமை வேறு யாருக்கும் நிகழக் கூடாது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மனோன்மணியின் சகோதரர் கூறுகையில், சைக்கோ போன்று நடந்து கொண்டதாகவும் தொடர்ந்து அடித்து அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறினார்.

இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனின் சித்திரவதையால் திருமணமாகி பத்து மாதங்களில் பெண் தீ வைத்து இறந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget