நாமக்கல் டூ தேனி.. நீட்தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவி காதலருடன் தஞ்சம்.!
உத்தமபாளையம் காவல் நிலையத்தில் மாணவி ஸ்வேதா தனது காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சின்ன அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்பாண்டியன். இவரது மகள் ஸ்வேதா 2019ல் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அவர் மருத்துவத்தில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி உள்ளார். கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் நீட் தேர்வில் அவர் பங்கேற்றார். இரண்டாவது முறையாக நீட் எழுதிய நிலையில் ஸ்வேதாவை கடந்த17-ம் தேதி முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
அருகே எங்காவது சென்றிருக்கலாம் என்று பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் ஸ்வேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இது குறித்து மாணவியின் தந்தை நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு ரிசல்டுக்கு பயந்து ஸ்வேதா எங்காவது சென்றாரா? அல்லது வேறு எதும் பிரச்னை இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரிடமும் விசாரணை தொடர்ந்தது.
மேலும் தேனி மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!