மேலும் அறிய

பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் பழுதடைந்த குடிநீர் குழாயைச் சீரமைக்கக் கோரிய புகாரால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பையே துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி: தீர்வு காண வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு நிர்வாகம், பிரச்சினையைச் சரி செய்வதற்குப் பதிலாகப் பிரச்சினையே எழக்கூடாது என்பதற்காக மக்கள் பயன்பாட்டில் இருந்த அடிப்படை வசதியையே பறித்திருக்கும் வினோத சம்பவம் சீர்காழியில் அரங்கேறியுள்ளது. நகராட்சி அலுவலகம் அருகிலேயே நடந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்: ஒரு பார்வை

சீர்காழி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குத் தடையற்ற குடிநீர் வழங்கும் நோக்கில், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. குடியிருப்புகளுக்குத் தனிநபர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள அதே வேளையில், ஏழை எளிய மக்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க பொது இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிடாரி வடக்கு வீதியில் எழுந்த சர்ச்சை

சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள பிடாரி வடக்கு வீதியில் நீண்டகாலமாகப் பொது குடிநீர் குழாய் ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. நகரின் முக்கியப் பகுதியான இங்குள்ள கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இதுவே முதன்மையான தாகம் தீர்க்கும் மையமாக விளங்கியது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்தக் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் வீணாகி வந்துள்ளது. இதனைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வராத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு என்பவர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து புதிய திருகு (Tap) அமைத்துத் தந்துள்ளார். பொதுநல நோக்கில் செய்யப்பட்ட இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

புகாரால் வந்த வினை: அதிகாரிகளின் 'விசித்திர' தீர்வு

குழாய் சரிசெய்யப்பட்டாலும், அந்தப் பகுதியைச் சுற்றி அடிக்கடி சாக்கடை நீர் சூழ்ந்து கொள்வதும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு, நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்களில் தொடர்ந்து புகார்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.

புகார்கள் சமூக வலைதளங்களில் பரவி நகராட்சி நிர்வாகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த 'தலைவலியை' நிரந்தரமாகத் தீர்க்க நினைத்த நகராட்சி ஊழியர்கள், அந்த குடிநீர் குழாயால் தான் தண்ணீர் சூழ்வதாக கூறி இன்று காலை திடீரென அந்த இடத்திற்கு வந்து, பொது குடிநீர் குழாயின் திருகைக் கழற்றி எடுத்துச் சென்றனர். அத்துடன் நிற்காமல், குழாய் இணைப்பை 'டம்மி' (Dummy) வைத்து முழுமையாக மூடி, குடிநீர் விநியோகத்தையே துண்டித்துவிட்டனர்.

மக்களின் குமுறல்

"சாக்கடை நீர் தேங்குவதைத் தடுத்து, குழாயைப் பராமரிக்க வேண்டியது நகராட்சியின் கடமை. ஆனால், புகார் கொடுத்தால் இணைப்பையே துண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில்; "குழாய் உடைந்தால் அதைச் சரி செய்ய வேண்டும். அதை விடுத்து, 'குழாய் இருந்தால் தானே புகார் வரும்' என்று மொத்தமாக இணைப்பைத் துண்டிப்பது ஒரு பொறுப்புள்ள நிர்வாகத்திற்கு அழகல்ல. நகராட்சி அலுவலகம் கண்ணெதிரே இருக்கும் போதே பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இப்படித் தட்டிப் பறிப்பது கண்டிக்கத்தக்கது," என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

நிர்வாகத் திறமையின்மையா? பழிவாங்கும் நடவடிக்கையா?

ஒரு சிறிய பழுதைச் சரி செய்யத் நிர்வாக திறன் அற்ற நிர்வாகம், ஒட்டுமொத்த இணைப்பையும் துண்டித்திருப்பது அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துவதுடன், அதற்குத் தீர்வாகப் பயன்பாட்டையே முடக்குவது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிடாரி வடக்கு வீதியில் மீண்டும் உடனடியாகக் குடிநீர் குழாய் இணைப்பை வழங்க வேண்டும் என்றும், சாக்கடை நீர் தேங்காத வண்ணம் அந்தப் பகுதியைச் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தவறும்பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆடிப் பௌர்ணமியில் ஜொலித்த ஆக்கூர்! - நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை!
ஆடிப் பௌர்ணமியில் ஜொலித்த ஆக்கூர்! - நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட திருவிளக்கு பூஜை!
காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget