Madurai: ‘அம்பர்கிரிஸ்’ எனும் திமிங்கல எச்சம்; பதுக்கிவைத்திருந்த 3 பேர் கைது - ஒரு கிலோ எச்சம் பல கோடியாம்
திமிங்கல எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் விசாரணையை நடத்திவருகின்றனர்.
மதுரை மாநகர் தெற்குவாசல் அருகே மறவர்சாவடி பகுதியில் உள்ள கடை ஒன்றில், விலை உயர்ந்த வாசனை திரவயங்கள் மற்றும் மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படும் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தினை பதுக்கிவைத்திருப்பதாக வனஉயிர் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடையில் சோதனையிட்டபோது அங்கு பதுக்கிவைத்திருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 10 கிலோவிற்கும் அதிகமான திமிங்கல எச்சத்தினை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர் தெற்குவாசல் அருகே தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தினை பதுக்கிவைத்திருந்த ரூ. 10கோடி மதிப்பிலான 9.5கிலோ எச்சம் பறிமுதல் செய்யப்பட்டிருகிறது.
— Arunchinna (@iamarunchinna) June 24, 2022
இதில் சம்பந்தப்பட்ட ராஜாராம், சுந்தரபாண்டி, கவி ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை. #madurai | #forest | @abpnadu pic.twitter.com/LZMVThT5qK
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்