
Inspiration: பார்வைச் சவாலைத் தாண்டி கோழிக்கறி வெட்டும் மாற்றுத்திறனாளி; நம்பிக்கையை விதைக்கும் ஜாகிர் உசேன் !
இடது கால் கல்லாப்பெட்டி பக்கம், வலது கால் கறிக்கட்டைக்கு பக்கம். கறியை வெட்டுவது, காசு வாங்குவது எல்லாமே அவர் தான். பார்வைச் சவாலுக்கு நடுவே பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார் ஜாகிர் உசேன்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது புழுதிப்பட்டி கிராமம். கடைக்கோடி கிராமத்தில் கறிக்கடை நடத்தி, தன் மகன்களை படிக்க வைத்தும், மனைவியுடன் ஒத்துழைப்போடு வாழ்ந்து வருகிறார் மாற்றுத்திறனாளி ஜாகிர் உசேன்.
நல்ல பார்வைகொண்ட நாமே சில நேரம் காய்கறி நறுக்கும் போது கூட கைகளையும் லேசா நறுக்குவது உண்டு. ஆனால் கூர்மனையான கறிக்கடை கத்தியை பார்வை இல்லாத போதும் லாவகமாக பயன்படுத்துகிறார் ஜாகிர் உசேன். பிரியாணிக்கா, கிரேவிக்கா என கேட்டு, கேட்டு சிக்கனை வெட்டித் தள்ளுகிறார். பணத்தை சைஸ் வாரியாக கண்டுபிடித்து கல்லாப்பெட்டியில் போடுகிறார். தரமான கறி என்பதால் விலையில் சமரசம் இல்லை. புளியங்கட்டையில் கறியை வெட்டி முடித்த கையோடு நம்மிடம் பேசத்தொடங்கினார் ஜாகிர் உசேன்.
கண் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி லாவகமாக கறிவெட்டும் காட்சி நெகிழ்சியை ஏற்படுத்துகிறது.
— Arunchinna (@iamarunchinna) June 23, 2022
சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜாகிர் உசேன் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.@SRajaJourno | #Sivagankai pic.twitter.com/EsrTWOYYCd


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

