மேலும் அறிய

இளம்பெண்கள் அறையை எட்டிப்பார்த்த இளைஞர்! மக்கள் கொடுத்த தர்ம அடியில் மரணம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

இளம் பெண்கள் தங்கியிருந்த வீட்டின் ஜன்னலை எட்டிப் பார்த்த நபரை செல்போன் திருட வந்ததாக நினைத்து அக்கம் பக்கத்தினர் தாக்கியதில் இளைஞர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வாரணவாசி பகுதியில் தங்கியிருந்து பணிபுரிந்துவரும் பரசுராமன் மதுபோதையில் பக்கத்து வீட்டில் தங்கி இருந்த பெண்களை, ஜன்னல் வழியாக பார்த்த நிலையில் திருடன் என எண்ணி தர்ம அடி கொடுத்த அக்கம் பக்கத்தினர் தாக்கிய சம்பவம் படுகாயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரசுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கொலை வெறி தாக்குதல் நடத்திய ஏழு பேர் கைது செய்து ஒரகடம் காவல்துறையினர் நடவடிக்கை

ஜன்னலை எட்டிப்பார்த்த இளைஞர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் இளம் பெண்கள் சிலர் வாடகைக்கு குடியிருந்து சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இளம் பெண்கள் சிலர் அறையில் இருந்துள்ளனர். அப்போது அறையின் ஜன்னல் வழியே இளைஞர் ஒருவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த இளம் பெண்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் அதே பகுதியை சேர்த்த இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியை எட்டிப் பார்த்த இளைஞரை மடக்கி பிடித்து செல்போன் திருட வந்ததாக எண்ணி சரமாரியாக தாக்கியுள்ளனர். 

உயிரிழப்பு:

கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான இளைஞர் படுகாயமுற்று அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதனையெடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் செனஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்ததில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தது திருவண்ணாமலை மாவட்டம் விளிச்சனம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (28 ) என்பதும், அவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் மதுபோதையில் பெண்கள் அறையை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பரசுராமனை செல்போன் திருட வந்ததாக எண்ணி அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வாரணவாசி பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் (30), சஞ்சய் (23), தினேஷ்குமார் (23) வெங்கடாசலம் (34), மணிகண்டன் (19), நிதீஷ் (18) , தயாநிதி (19) உள்ளிட்ட ஏழு பேரை ஒரகடம் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்   மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததால், முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு  கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை துவக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Breaking News LIVE: மேற்கு வங்க ரயில் விபத்து : 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
Breaking News LIVE: மேற்கு வங்க ரயில் விபத்து : 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Crime :  ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Crime : ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPSKanchanjunga Express | FULL SPEED-ல் வந்த சரக்கு ரயில், தூக்கி வீசப்பட்ட ரயில் பேட்டி!ஐந்து பேர் பலி!Chandrababu and Nitish kumar | சந்திரபாபு நாயுடு vs நிதிஷ் குமார்..சபாநாயகர் CHAIR-க்கு போட்டி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Mannargudi : ”தந்தை தூய்மை பணியாளர் – மகள் நகராட்சி ஆணையர்” மன்னார்குடியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
Breaking News LIVE: மேற்கு வங்க ரயில் விபத்து : 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
Breaking News LIVE: மேற்கு வங்க ரயில் விபத்து : 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Vikravandi Bypoll : அதிமுக முடிவு நல்லது: பாமக வெற்றி பெற்றால்? மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி 
Crime :  ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Crime : ”மருமகனை கொலை செய்ய கூலி படையை ஏவிய பூசாரி மாமனார்” என்ன நடந்தது ? பரபரப்பு தகவல்கள்..!
Bakrid: பக்ரீத் கொண்டாட்டம், இஸ்லாமிய குழந்தைகளை ஆழத் தழுவி முத்தமிட்ட எம்பி சுதா...!
பக்ரீத் கொண்டாட்டம், இஸ்லாமிய குழந்தைகளை ஆழத் தழுவி முத்தமிட்ட எம்பி சுதா...!
UGC Guidelines: இணையதளத்தில் இதையெல்லாம் கண்டிப்பாக வெளியிடணும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
UGC Guidelines: இணையதளத்தில் இதையெல்லாம் கண்டிப்பாக வெளியிடணும்: கல்லூரிகளுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
West Bengal Train Accident: ரயில் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - அடுத்தடுத்து உடல்கள் மீட்பு; 15 பேர் பலி
West Bengal Train Accident: ரயில் மீது ரயில் மோதி பயங்கர விபத்து - அடுத்தடுத்து உடல்கள் மீட்பு; 15 பேர் பலி
சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் -  மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் - மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
Embed widget