மேலும் அறிய

பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!

காஞ்சிபுரம் பகுதியில் 14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்

காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் செயல்பட்டு வரும் CSI கிறித்துவநாதர் ஆலயத்தின் பாதிரியார் மீது முதல்வரின் தனிப் பிரிவுக்கு பறந்த புகார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலரின் விசாரணைக்கு பின் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் பாதிரியார் தேவ இரக்கம் கைது.

சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி

சின்ன‌ காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் அருகாமை பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி. இவர் காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா உயிரிழந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் காலம்  காஞ்சிபுரத்தில் உள்ள சர்ச்சில் சிறுமி தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

கத்தியபடி சிறுமி

அப்போது சர்ச்சில் பாதிரியாராக இருந்துவரும் தேவ இரக்கம் என்பவர் ஒரு நாள் இரவு சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது அங்கிருந்து கத்தியபடி சிறுமி வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் அங்கம் பக்கத்து வீட்டினருக்கு இந்த சிறுமியை பாதிரியார் பாலியியல் துன்புறுத்தியது கசிந்திருக்கிறது.

முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தகவல் அறிந்து இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இம்மனு வந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து உண்மை நிலையை அறிந்த நிலையில் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, விசாரணையின் அடிப்படையில் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டோம். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். என தெரிவித்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ -   வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
Embed widget