மேலும் அறிய
Advertisement
‛எங்களுக்கே ‛டப்’ கொடுக்குறீயே... யாருய்யா நீ...’ போலி ‛கமிஷனர்’ விஜயனிடம் 24 மணி நேர விசாரணை!
மாஜிஸ்திரேட் விசாரணையில் விஜயனிடம் விசாரிக்க 24 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த விஜயன் 'கமிஷனர்' எனக் கூறி திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி போலீசிடம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள போலீஸ் சந்தேகத்தின் பெயரில் கொடுக்கப்பட்ட ரகசிய தகவலால் தமிழ்நாடு காவல்துறை வாகன சோதனையின் போது பிடிபட்டார்.. பொம்மை துப்பாக்கி, அசிஸ்டென் கமிஷனர் ( Assistant Commissioner ) என்று அச்சிடப்பட்ட ஐடிகார்ட், சைரன் வைத்த பொலிரோ கார் உள்ளிட்டவையை கைப்பற்றிய பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் ஐ.பி.சி சட்டப்பிரிவு 420-இன் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் விஜயன் குறித்த செய்தி பரவவும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் போலிசாரிடம் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். விஜயன் குறித்து மளமளவென புகார்கள் குவிவதை கொண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கைதான விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரநாயுடு, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா என முக்கிய நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவ தொடங்கியது. இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வேலை செய்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விஜயன் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஒரிஜனல் போலீசை விஞ்சும் அளவிற்கு டுபாக்கூர் போலீஸ் விஜயன் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணை முடிவுக்கு பின்பு தான் விஜயனின் முழு அலப்பறைகள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சப்ஜெயிலில் இருந்த விஜயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் விசாரணையில் விஜயனிடம் விசாரிக்க 24 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் விஜனிடம் விசாரணை செய்கின்றனர். முக்கிய நபர்களுடன் விஜயன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பாகவும், தான் கமிஷனர் என்ற பதவியை பயன்படுத்தி எங்கு, எங்கு ஏமாற்றினார் என்பது குறித்தும் விசாரணை வலுக்கிறது.
மேலும் காவல்துறையினர் சிலர்....," சென்னையை சேர்ந்த விஜயன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த விஜயனால் அதிகளவு சம்பாரிக்க முடியவில்லை என அவரது மனைவி திட்டியதால் மனம் உடைந்த விஜயன் சீக்கிரமாக செட்டில் ஆவது எப்படி என்று சிந்திக்க தொடங்யுள்ளார். சமூகத்தில் பெரிய நபராக காட்டிக் கொள்ளவும் தமிழ்நாடு போலீஸ் கமிஷனர் வேடமணிந்து பல்வேறு இடங்கள் சுற்றுவந்துள்ளார். ஆங்காங்கே பல்வேறு பொய்களை சொல்லி மரியாதை மட்டுமின்றி கூடவே பணத்தையும் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். வெளிமாநிலங்களில் சுற்றித்திரியும் போது விஜயனின் போலித்தனம் குறித்த புகார்கள் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணையில் தற்போது விஜயன் குறித்து பூதாகர தகவல்கள் கிடைத்துள்ளது. விஜனிடம் முழு விசாரணைக்கு பின் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion