Crime: வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மருத்துவமனையில் நடந்த கொடூரம்- கணவர் ஷாக்
Crime: வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு, மருத்துவமனையில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: குருகிராம் மருத்துவமனையில் நோயாளிக்கு,பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் கொடூர சமபவம்:
குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தபோது, தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விமானப் பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். கடந்த 13ம் தேதிடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தனது கணவரிடம் கூறி அந்த பெண் கதறியுள்ளார். தொடர்ந்து, 46 வயதான அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், சதார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் நிறுவனத்தின் சார்பாக பயிற்சிக்காக குருகிராமிற்கு வந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில், நீரில் மூழ்கிய சம்பவம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, ஏப்ரல் 5 ஆம் தேதி, அவரது கணவர் குருகிராமில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மனைவியை அனுமதித்தார். ஏப்ரல் 13 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடந்தது என்ன?
புகாரின்படி "சிகிச்சையின் போது, ஏப்ரல் 6 ஆம் தேதி தான் வென்டிலேட்டரில் இருந்தேன். அப்போது மருத்துவமனையின் சில ஊழியர்கள் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், வென்டிலேட்டரில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை, மிகவும் பயந்திருந்தேன். சம்பவத்தின் போது நான் மயக்க நிலையில் இருந்தேன். மேலும் இரண்டு செவிலியர்களும் என்னைச் சுற்றி இருந்தனர்," என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் கணவரிடம் கூறியதும், அவர் அளித்த ஒத்துழைப்பின் பேரில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். உயிரை காக்கும் மருத்துவமனையில் நோயாளிக்கே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை:
பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, குருகிராமில் உள்ள சதார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண, பணி அட்டவணையை ஸ்கேன் செய்யவும், சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் பணிகளையும் போலீஸ் குழு போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் நீதிபதி முன்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். விரைவில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். மருத்துவமனையின் பாதுகாப்பு ஊழியர்களைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது விளக்கமளித்துள்ளனர்.

