‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஷூட்டிங் நிறைவு - புகைப்படங்கள்!
கோமாளி , லவ் டுடே, ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
போடா போடி , நானும் ரவுடி தான் , காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி , யோகிபாபு , எஸ்.ஜே.சூர்யா, சீமான், ஆனந்த் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைத்துள்ளார். 2025 நவம்பர் மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் இசையில் உருவாகும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உணடு. இந்தப் படத்தில் ’தீமா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்தில் சீமான் நடிக்கிறார் என்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. போஸ்ட் புரோடக்சன் வேலைகள் தொடங்கியுள்ளனர் படக்குழுவினர்.
விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.