மேலும் அறிய

பூக்கள் விலை என்ன தெரியுமா? விலையை கேட்டால் தலை சுற்றும்!

கடந்த ஒரு மாதமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டியும், தொடர் சுப முகூர்த்த தினங்கள் இருப்பதாலும் விலை உச்சம் தொட்டுள்ளது.

தமிழக ,கேரள எல்லை  இரு மாநிலத்தை இணைக்கும் எல்லை மாவட்டமாக தேனி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி , கட்டப்பனை , வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் கம்பம், சீலையம்பட்டி பகுதியில்  உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டியும், தமிழகத்தில் தொடர் சுப முகூர்த்த தினங்கள்  நடைபெறுவதாலும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலையேற்றம் உச்சம் தொட்டுள்ளது.

பூக்கள் விலை என்ன தெரியுமா? விலையை கேட்டால் தலை சுற்றும்!

தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிபட்டி, பூமலைக்குண்டு, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பூக்கள் தேனி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் பூக்கள் கம்பம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும். பரவலாக கேரள மாநிலத்திற்கு கம்பம் பகுதியில் இருந்தே பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் முதல் தேனி, கம்பம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.500க்கும் விற்பனையான நிலையில் தற்போது மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு 2,000 வரை விற்பனையாகி வருகிறது.

பூக்கள் விலை என்ன தெரியுமா? விலையை கேட்டால் தலை சுற்றும்!

கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.   கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் கொண்டாடப்படுகிறது .கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். இந்த ஓணம் பண்டிகை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட தேவைப்படும் பெரும்பாலான பொருள்கள் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இருந்து வெள்ளம்,  பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

பூக்கள் விலை என்ன தெரியுமா? விலையை கேட்டால் தலை சுற்றும்!

தற்போது தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் இருப்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு தமிழகத்தில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், கம்பம் பள்ளத்தாக்கில் மல்லிகை பூ கிலோ ஒன்றுக்கு ரூபாய் 2,000 முதல் 2,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல செண்டு பூ, சம்பங்கி, ஜாதி பூ, முல்லைப் பூ போன்ற  பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு சில வாரமாக பூக்கள் விலை மந்தமாக இருந்த நிலையில் தற்போது திடீரென பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget