Share Market: அடிமேல் அடிவாங்கும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவு..!
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 30.63 அல்லது 0.05 % புள்ளிகள் குறைந்து 60,100.08 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 17.85 அல்லது 0.10% புள்ளிகள் குறைந்து 17,751.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் காணப்படுவது முதலீட்டாளார்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
லாபம்-நஷ்டம்
ஹீரோ மோட்டோகோர்ப், டாடா மோட்டார்ஸ், எம்எம், பாரதி ஏர்டெல், லார்சன், டைட்டன் கம்பெனி, பிரிட்டானியா, நெஸ்டீலே, பஜாஜ் பைனான்ஸ், டெக் மகேந்திரா, அப்போலா மருத்துவமனை, இன்போசிஸ், எச்சிஎல் டெக், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், சிப்ளா, என்டிபிசி, கோல் இந்தியா, பிபிசிஎல், கிராசிம், ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா, ஐடிசி, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.