Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை; பட்ஜெட் பற்றி முதலீட்டாளர்கள் சொல்வது என்ன?
Stock Market: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளால் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததாக பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 762.04 அல்லது 0.98% புள்ளிகள் உயர்ந்து 77,501.93 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 248.75 அல்லது 1.00% புள்ளிகள் உயர்ந்து 23,482.20 ஆகவும் வர்த்தகமாகியது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
மாருதி சுசூகி, ட்ரெண்ட், டாடா கான்ஸ் ப்ராட், ஈச்சர் மோட்டர்ஸ், ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ,எம்$எம், ஏசியண் பெயிண்ட்ஸ், ஹெச்.யு.எல்., இந்தஸ்லேண்ட் வங்கி, பிரிட்டானியா, ஹீரோ மோட்டர்கார்ப், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே,அப்பல்லோ மருத்துவமனை, கோடாக் மஹிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் இருந்தது.
பாரத் எலட்ரிக், பவர்க்ரிட் கார்ப், சிப்ளா, க்ரேசியம், கோல் இந்தியா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், விப்ரோ, ஓ.என்.ஜி.சி., பி.பி.சி.எல்,, என்.டி.பி.சி., ஹெச்.சி.எல்., டெக், டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், எஸ்.பி.ஐ., அதானி எண்டர்பிரைசிஸ்ம் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.
பட்ஜெட் அறிவிப்புகள் இருந்தாலும் பங்குச்சந்தை ஏதிர்பார்த்த அளவு பரபரப்பு இல்லாமல் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது. பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் முதலீட்டாளர்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொள்கைகள் அறிவிப்பு என்ன என்பதில் கவனமாக இருக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவு அறிவிப்பு இல்லை என்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ’lithium-ion battery scrap’ சுங்க வரி ரத்து செய்தது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவர் என சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“பட்ஜெட் அறிவிப்பில் நாட்டில் வளர்ச்சி சார்ந்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறு, குறு தொழில் முன்னேற்றத்திற்காக கடல் வரம்பு ரூ.20 லட்சம் ஆக உயர்த்தியது பல நிறுவனங்கள் புதிதாக உருவாக ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. இருப்பினும், அமெரிக்க பொருளாதார சூழல், இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதங்களில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு ஆகியவற்றை கவனிப்பது முதலீட்டாளர்களுக்கு நல்லது.” என முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

