SBI Credit Card: எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா... உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு!
SBI Credit Card EMI Processing Fee: எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமாக ஈஎம்ஐ பரிவர்த்தனை செய்யும்போது இனி 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
ஒவ்வொரு மாதம் தொடங்குகையில் நிதி சம்பந்தமான விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். வங்கிகள் தரப்பிலிருந்து மாற்றம் செய்யப்படும் இந்த விதிமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும், அதிர்ச்சியையும் கொடுக்கும்.
அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிவிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, எஸ்பிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலமாக ஈஎம்ஐ பரிவர்த்தனை செய்யும்போது இனி 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதனுடன் சிறு தொகை வரியாகவும் வசூல் செய்யப்படும். இந்தப் புதிய விதிமுறை இன்று முதல் ( டிசம்பர் 1ஆம் தேதி) அமலுக்கு வந்தது.
இது குறித்து எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், அனைத்து விவரங்களையும் மின்னஞ்சலில் முழுமையாக அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
சில்லறை விற்பனை மையங்கள், கடைகள், ஆன்லைன் ஷாப்பிங் என எங்கு பரிவர்த்தனை செய்தாலும் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்கள் வாங்கினாலும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இப்போது பொருள்களை முன்கூட்டியே வாங்கிவிட்டு, அதற்கான பணத்தை தவணை முறையில் பின்னர் செலுத்திக்கொள்ளும் ‘buy now pay later' என்ற நடைமுறை பிரபலமாகி வருகிறது.
ஒரே தவணையில் பெரிய தொகையைச் செலவு செய்வதைவிட ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையைச் செலவிடுவது ஏதுவாக இருக்கும். இதுபோன்ற சூழலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமெனவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வில் மாற்றம்: செயற்குழு தீர்மானங்கள் அப்படியே அச்சு மாறாமல் இதோ!
Aparna Das: ஓரமாய் நின்னு... ஒட்டுமொத்த டீமை குளோஸ் பண்ணிட்டீயேம்மா... யாருப்பா இந்த அபர்ணா தாஸ்!
Gold-Silver Price, 1 December: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது..!
Matchbox Price Hike: 14 ஆண்டுகளுக்குப் பின் விலை உயர்ந்த தீப்பெட்டி: இன்று முதல் ரூ.2க்கு விற்பனை!