மேலும் அறிய

Matchbox Price Hike: 14 ஆண்டுகளுக்குப் பின் விலை உயர்ந்த தீப்பெட்டி: இன்று முதல் ரூ.2க்கு விற்பனை!

Matchbox Price Hike: தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும்,கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால், வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரூ 1ல் இருந்து ரூ 2 ஆக தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த 1995ஆம் ஆண்டு 50 காசில் இருந்த தீப்பெட்டியின் விலை  2007ல்  ரூ 1ஆக  உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் 14 ஆண்டுகள் கழித்து தற்பொழுது தீப்பெட்டியின் விலை 2 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்த பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ 410ல் இருந்து 850 ரூ உயர்ந்துள்ளது. இதே போன்று மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாய் உயர்ந்துள்ளது. குளோரைட் 70 ரூபாயில் இருந்து ரூ 82ம், அட்டை 42 ரூபாயில் இருந்து 55ரூ ம் உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால்,  தற்பொழுது விற்பனை செய்யும் ரூ 1க்கு தீப்பெட்டி விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதால் தீப்பெட்டி விலை உயர்வுதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூறினர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget