Petrol, Diesel Price: மாதம் கடந்தாலும் பேதம் கடக்காத பெட்ரோல், டீசல்! அதே விலை!
தொடர்ந்து 30வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை மத்திய அரசு தீபாவளியன்று குறைத்தது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்றும் விலை மாற்றமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 30வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.
மேலும் படிக்க: விஜய் சேதுபதி படம் மீது இளையராஜா புகார்: கடைசி விவசாயி வெளியாவதில் சிக்கல்!
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு கையிருப்பில் உள்ள சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்