மேலும் அறிய
Advertisement
விஜய் சேதுபதி படம் மீது இளையராஜா புகார்: கடைசி விவசாயி வெளியாவதில் சிக்கல்!
கடைசி விவசாயி படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் தன்னுடைய இசை இருந்ததாகவும், தற்போது இங்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் தன்னுடைய இசை இல்லை என புகார்.
காக்கா முட்டை புகழ் இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி என்கிற திரைப்படத்தை சமீபத்தில் இயக்கி முடித்தார். ட்ரிபிள் ஆர்ட் புரோடக்சன் என்ற நிறுவனம் அந்தப் படத்தை தயாரித்தது. நல்லாண்டி, யோகி பாபு, முனீஸ்வரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.
உங்க படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு அந்த படத்தின் கதை மீது ஈர்ப்பு ஏற்பட , பின்னர் தயாரிப்பாளராக அவரும் இணைந்து கொண்டார். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, தயாரிப்பு என அனைத்தையும் இயக்குனர் மணிகண்டன் தனிநபராக கவனித்துக்கொண்டார்.
இந்தநிலையில் அப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவரும் படத்திற்கான இசை அமைக்கும் பணிகளை நிறைவு செய்த நிலையில், பின்னணி இசை அனைத்தையும் முடித்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ட்ரெய்லர் வெளியான நிலையில், அதில் இளையராஜாவின் இசை இடம் பெற்றிருந்தது.
இருந்தபோதும் இயக்குனரான மணிகண்டன், இளையராஜாவிடம் மேலும் எதிர்பார்த்துள்ளார். சில திருத்தங்களை இயக்குனர் மணிகண்டன் கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ரிச்சட் ஹார்வியுடன் இணைந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கடைசி விவசாயி படத்திற்கு பின்னணி இசை அமைத்தார். இதைத் தொடர்ந்து படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கடந்த 11 நாட்களுக்கு முன் கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
டிசம்பரில் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், திரைப்படத்தில் முன்பு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆன இளையராஜா, இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தன்னுடைய ஒப்புதல் பெறாமலும், தன்னிடம் தகவல் தெரிவிக்காமலும், கடைசி விவசாயி படத்தின் இசை அமைக்கும் பணி வேறொருவருக்கு வழங்கப்பட்டதை தான் அறிந்ததாகவும், இது சங்க விதிகளுக்கு முரணானது என்பதால் சம்பந்தப்பட்ட படம் வெளியாவதில் தனக்கு ஆட்சேபணை இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளையராஜா புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடைசி விவசாயி படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் தன்னுடைய இசை இருந்ததாகவும், தற்போது இங்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் தன்னுடைய இசை இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் இந்த புகார் மீது உரிய முகாந்திரம் இருக்கும்பட்சத்தில், விஜய்சேதுபதி தயாரித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம், திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்படலாம். பிரபல மூத்த இசையமைப்பாளர் இளையராஜா, தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக பிரபல நடிகர் தயாரிப்பு படத்தின் மீது தெரிவித்திருப்பது கோடம்பாக்கம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா இசையமைத்த கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர்...
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion