கூலி திரைப்படம்: ரஜினிகாந்த் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

Published by: ABP NADU

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கிரார்.

கடைசியாக அவர் நடித்த வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஹிட் கொடுத்த படமென்றால் ஜெயிலர் தான்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் எடுக்கப்படும் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பாங்காங், ஜெய்பூர், விசாகப்பட்டினம் என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், தாய்லாந்தில் நடக்கும் படப்பிடிப்பிற்காக அண்மையில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்திருந்தார்.

அப்போது, கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஜனவரி 13ம் தேதி முதல் 28ம் தேதி வரை படப்பிடிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.