உங்கள் வணிகத்தை மேம்படுத்தும் மென்பொருட்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க
பணியிடங்களை மேம்படுத்தவும், மதிப்பீடு செய்யவும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் திட்டங்களை நிர்வகிப்பதற்கும் தேவையான கணிப்பொறி மென்பொருள்களை இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இம்மென்பொருள்கள் உங்கள் வணிகத்தை மேலும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்லாக் : ஸ்லாக் என்பது இணைய இணைப்பு மூலம் நிகழ்நேர செய்தியிடலை அனுமதிக்கும் தொலைதொடர்பு செயலியாகும். மேலும், குரல் அழைப்புகள், வீடியோ கான்ஃபரன்சிங், கோப்பு, மற்றும் கூகிள் கேலெண்டர் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளின் ஒருங்கிணைப்பையும் ஸ்லாக் வழங்குகிறது.
மைக்ரோசாப்ட் டீம்ஸ் : மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் நிறுவனத்தின் டீம்ஸ் சேவை அதிகபட்சம் 1000 பேர் இணைந்த வீடியோ கான்ஃபரன்சிங், குரல் அழைப்பு விடுக்கும் வசதி, மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளை அனுமதிக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட் போன்றவற்றின் மூலம் ஆவணங்களை நிகழ்நேரத்தில் உருவாக்கவும், திருத்தவும் அனுமதிக்கிறது.
கூகிள் சூட்: கூகுள் நிறுவனத்தின் கல்வி சார்ந்த சேவைகளில் இதுவும் ஒன்று. மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை(cloud computing) மூலம் மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஒருங்கே இணைக்கிறது. வீடியோ கான்பரன்சிங், ஆடியோ அழைப்புகள், கூகிள் டாக்ஸ், ஷீட்கள், கேலெண்டர் போன்ற பிற கூகுள் சேவைகளுடன் ஒத்துப் போகிறது.
பேஸ்கேம்ப் : பேஸ்கேம்ப் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு திட்ட மேலாண்மை செயலியாகும். உங்கள் குழு உறுப்பினர்களுடன் எளிதில் தொடர்புகொள்வதற்கும், திட்டங்களை நிர்வகிப்பதற்கும், கோப்புகளைப் பகிர்வதற்கும், திட்டங்களை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கும் அனுமதிக்கிறது.
Asana: இது முழுக்க முழுக்க திட்ட மேலாண்மை தொடர்பான மென்பொருளாகும். இதில் ‘நேரக் கணக்குடன் பணிப்பாய்வு’ மற்றும் ‘எச்சரிக்கைப் பொறிமுறை’ உள்ளிட்ட முழுமையான திட்டச் செயலாக்க நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன . குழு உறுப்பினர்களுக்கான பணிகளை ஒதுக்குதல், திட்டங்களை இறுதி செய்தல், தாமதங்கள் மற்றும் முன்னேற்றங்களைக் கண்காணித்தல், பிரச்சார சுருக்கங்களை வடிவமைத்தல், திட்ட வரைபடங்களை பட்டியலிடுதல் போன்ற அனைத்தை அம்சங்களையும் வழங்குகிறது.
ட்ரெல்லோ : பணி மேலாண்மை செயல்பாடுகளை இந்த செயலி ஒருங்கிணைக்கிறது. இதிலுள்ள ட்ரெல்லோ கார்டில் குழு உறுப்பினர்கள் திட்ட செயல்பாடுகள் தொடர்பான காலக்கெடு மற்றும் பிற விவரங்களையும் குறிப்பிடலாம்.
மேகக்கணி சேமிப்பக கருவிகள்
கூகுள் டிரைவ்: கூகுள் டிரைவ் என்பது இணைய வழியில் கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். இதன் மூலம் இணைய வழியில் ஒருவர் கோப்புகளைச் சேமிக்கலாம். தன் கோப்புகளை பிறருடன் பகிரலாம். கூட்டாகத் தொகுக்கலாம். கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் அனைவருக்கும் 15 ஜிபி நினைவகம் வழங்கப்படும். இந்த நினைவகத்தை கூகுள் டிரைவ், ஜிமெயில், கூகுள் பிளஸ் படங்கள் (பிக்காசா வெப் ஆல்பம்ஸ்) ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம்.
டிராப்பாக்ஸ் : நவீன பணியிடத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மற்றொரு கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். டிராப்பாக்ஸ் மூலம் குழு உறுப்பினர்களுடன் அதிக நினைவகத்தைக் கொண்ட ஆவணங்கள், பவர்பாயிண்ட் கோப்புகள், ஓவியங்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் கூகுள் மீட் , ஸ்கைப், ஜூம் , உபர் கான்பாரன்ஸ் போன்ற கணினி பென்பொருள்களை பயன்படுத்த தொடங்கலாம்.
மேலும், பாஸ்பேக், டீம்வியூவர் , எவர்நாட் வெப் கிளிப்பர், அடோப் க்ரியேட்டிவ் க்ளவுட் போன்ற கணிப்பொறி மென்பொருள்கள் வணிக ரீதியாகவும், தனிநபர் பயன்பாட்டிற்காகவும் உபயோகிக்க தொடங்கலாம். இம்மென்பொருள்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), ஓஎஸ் எக்ஸ் (OS X) லினக்ஸ் (Linux), ஐஓஎஸ் (iOS) ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட கணினிகளிலும் இயங்கும். விண்டோஸ் ஆர்டி (Windows RT), விண்டோஸ் கைப்பேசியிலும் (Windows Phone)ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை (Android) அடிப்படையாகக் கொண்ட கைப்பேசியிலும் இயங்கும்.