TN Agriculture Budget 2022 LIVE: 1 மணி நேரம் 51 நிமிடம்... முடிந்த வேளாண் பட்ஜெட்டில் நடந்தது என்ன? முழு தகவல்கள் இதோ!
Tamil Nadu Agriculture Budget 2022 LIVE Updates: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள abp நாடு பக்கத்தில் காணலாம்.
LIVE
Background
தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் பொதுபட்ஜெட் மீதான விவாதம் 21, 22, 23ஆம் தேதிகள் சட்டப்பேரவையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24 ஆம் தேதி விவாதத்தின் மீதான ஸ்டாலின் பதிலுரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‛மூளையில் உதித்த திட்டமல்ல... இதயத்தில் உதித்த திட்டம்’
என் மூளையில் உதித்தது அல்ல இந்த நிதி நிலை அறிக்கை; பலரின் இதயத்தில் உதித்தவை- வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு ரூ.30.56 கோடி
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு ரூ.30.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிப்பு
திருவாரூரில் விவசாய தொழிற்பேட்டை
திருவாரூரில் விவசாய தொழிற்பேட்டை ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு நிதி ஒதுக்கீடு
அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வகைகள் வளர்ப்புக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண் பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ.33007.78 கோடி
2022-2023 ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ.33007.78 கோடி