Volvo EX30: ஒரே சார்ஜில் 480 கிமீ பயணம்; ஸ்டைலிஷான இவி காரை களமிறக்கிய வோல்வோ - இவ்வளவு சிறப்புகளா.?
Volvo EX30 Launched in India: இந்தியாவில் சில மின்சார கார்களை களமிறக்கி வரவேற்பை பெற்ற வோல்வோ நிறுவனம், அதன் EX30 மாடலை அறிமுகம் செய்துள்ளது. மிரட்டலான ரேஞ்சுடன் வந்துள்ள இதில் உள்ள வசதிகள் என்ன.?

ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான வோல்வோ, அதன் மின்சார கார்களை இந்தயாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் XC40 ரீசார்ஜ் மற்றும் C40 ரீசார்ஜ் போன்ற மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது மற்றொரு மின்சார வாகனமாக EX30 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
EX30-ன் வடிவமைப்பு
வோல்வோ EX30, அந்நிறுவனத்தின் மற்றொரு மாடலான வோல்வோ EX90 எஸ்யூவியில் இருந்து பெறுகிறது. நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்டுகள், வோல்வோவின் சிக்னேச்சர் கையொப்பமான 'Thor's Hammer' எல்இடி டிஆர்எல்-கள், பிக்செல் வடிவிலான பின்புற லைட்டுகள்(இது சமீபத்தில் வெளியான ES90 செடானில் உள்ளது) போன்ற வெளிப்புற சிறப்பம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது.
உட்புற வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்
வோல்வோ நிறுவனத்தின் மின்சார கார்களில் மிகச் சிறிய மாடலான EX30 காரின் உட்புறத்தில், வோல்வோ EX30 சர்வதேச மாடல்களில் உள்ள அதே வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில், செங்குத்தாக பொருத்தப்பட்ட 12.3 இன்ச் டச் ஸ்கிரீனும், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1040 வாட்ஸ் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கீ பிளஸ், NFC ஸ்மார்ட் கார்டு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங்க, ஆம்பியன்ட் லைட்டிங் தீம்களுடன் புதுப்பிக்கப்பட்ட கூகுள் இன்ஃபோடெயின்மென்ட் OS-ம் இடம்பெற்றுள்ளன. இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணக்கமானது.
இந்த EX30 மாடலில், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் வ்யூவ் கேமரா மற்றும் இன்டர்செக்ஷன் ஆட்டோ-ப்ரேக் போன்ற ADAS அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த காருக்கு 3 ஆண்டுகள் வாரண்ட்டி, RSA தொகுப்பை வழங்குகிறது. அதோடு, 8 ஆண்டுகள் பேட்டரி வாரண்ட்டி பேக்கேஜ் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
EX30 - பவர் ட்ரெய்ன்
இந்த கார், நிறுவனத்தின் சஸ்டெயினபிள் எக்ஸ்பீரியன்ஸ் ஆக்கிடெக்ச்சர் தளத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் சர்வதேச மாடல்கள் 2 பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெற்றிருந்தாலும், இந்தியாவில் 69 kWh NMC(நிக்கர்-மாங்கனீசு-கோபால்ட்) பேட்டரி பேக்கை கொண்டிருக்கும். இந்த மாடல், ஒன்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD(All Wheel Drive) வேரியண்ட்டுகளுடன் வழங்கப்பட உள்ளது.
இந்த பேட்டரி யூனிட், 427 bhp பவர், ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோ மீட்டர் வரையிலான பயண ரேஞ்சை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
EX30 காம்பேக்ட் எஸ்யூவியின் விலை என்ன.?
இந்த வால்வோ EX30 மிகச்சிறிய மற்றும் மலிவு விலை மின்சார எஸ்யூவி-யாக வந்துள்ளது. அதோடு, சர்வதேச சந்தைகளில் வோல்வோவின் மற்ற மாடல்களான EX40 மற்றும் EC40 ஆகியவற்றுக்கு கீழ் இது வைக்கப்பட்டுள்ளது.
இந்த EX30 மின்சார காரை தனது பெங்களூரு அருகே உள்ள வோல்வோ நிறுவனத்தின் ஹோஸ்கோட் ஆலையில் அசெம்பிள் செய்கிறது வோல்வோ. அதனால், இந்த EX30 மாடலை 41 லட்சம் ரூபாய் என்ற அறிமுக எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது வோல்வோ.
மேலும், பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் இந்த EX30 இவி காரை அக்டோபர் 19-ம் தேதி வரை 39.99 லட்சம் ரூபாய்க்கு முன்பதிவு செய்து வாங்கலாம். நவம்பர் முதல் வாரத்தில் காரின் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில், வோல்வோ நிறுவனத்திற்கு இந்த EX30 மாடல் நல்ல திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 40 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த மாடல் கச்சிதமாக அமர்ந்துள்ளது.
ஏற்கனவே இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ கார்கள் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த காரும் அந்த வரிசையில் சேரும் என அந்நிறுவனம் எதிர்பார்ப்பில் உள்ளது. நல்ல ஸ்திரமான ஒரு மின்சார காரை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த EX30 நல்ல தேர்வாக இருக்கும் என நம்பலாம்.





















