மேலும் அறிய

Taigun Facelift: மிக்ஸி இல்லையே, க்ரைண்டர் இல்லையே.. டைகனில் மிஸ் ஆகும் வசதிகள், ஃபேஸ்லிஃப்ட் தீர்வாகுமா?

Volkswagen Taigun Facelift 2026: இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வாகன் டைகன் கார் மாடலில் இல்லாத அம்சங்களும், ஃபேஸ்லிஃப்ட் மீதான எதிர்பார்ப்புகள் குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.

Volkswagen Taigun Facelift 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வாகன் டைகன் கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தால் கடந்த 2021ம் ஆண்டு முதல், விற்பனையில் உள்ள டைகன் கார் மாடலுக்கு முதல்முறையாக ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட்கள் வழங்கப்படுகின்றன. புதிய எடிஷன் விரைவில் உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகள், அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய எடிஷனில் என்ன அம்சங்கள் இல்லை? என்ன குறைகள் இருக்கின்றன? புதிய ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் கார் பிரியர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். 

ஃபோக்ஸ்வாகன் டைகன் எஸ்யுவில் இல்லாத அம்சங்கள்:

போதுமான இடவசதி: பின் இருக்கை பயணிகளுக்கு கால்களை வசதியாக வைக்க போதுமான இடவசதி இல்லை. இது உயரமான பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.

கேபின் தரம்: கேபினின் ஃபினிஷிங் மற்றும் ஃபிட்டிங் ஆனது இன்னும் சற்று கூடுதல் தரத்தில் இருக்கலாமென சில பயனர்கள் வலியுறுத்துகின்றனர்

லெவல் 2 ADAS: எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம், டைகனின் பல போட்டியாளர்களில் நிலையானதாக உள்ளது. ஆனால், ஃபோக்ஸ்வாகன் மாடலில் இல்லை.

360 டிகிரி கேமரா: நிலையான ரியர் வியூ கேமரா மட்டுமே காம்பேக்ட்/மிட்சைஸ் எஸ்யுவியில் காணப்படுகிறது. உற்பத்தியின் போது பொருத்தாலம், வாங்கிய பிறகு இணைக்கப்படக்கூடிய அம்சமாக மட்டுமே உள்ளது.

மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்: அண்மையில் வெளியான தகவல்களின்படி, சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் இன்ஜினில் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கைவிடப்பட்டு, DSG ஆப்ஷன் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது

பனோரமிக் சன்ரூஃப்: பல்வேறு போட்டியாளர்களை போன்று டைகன் முழுமையான பனோரமிக் யூனிட்டை கொண்டிருக்காமல், நிலையான மின்சார சன்ரூஃபை மட்டுமே கொண்டுள்ளது

டீசல் இன்ஜின் ஆப்ஷன்: ப்ராண்டின் சர்வதேச சூழலை போன்று, இந்தியாவிலும் டைகனில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. டீசல் ஆப்ஷன் இல்லாதது நெடுந்தூர பயணிகளுக்கான காராக டைகனை பரிசீலிக்க முடியாமல் மாற்றியுள்ளது.

Taigun Facelift: மிக்ஸி இல்லையே, க்ரைண்டர் இல்லையே.. டைகனில் மிஸ் ஆகும் வசதிகள், ஃபேஸ்லிஃப்ட் தீர்வாகுமா?

டைகன் ஃபேஸ்லிஃப்ட் எதிர்பார்ப்புகள்:

வரும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில், மேம்படுத்தப்பட்ட டைகன் கார் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் மேற்குறிப்பிடப்பட்ட பல குறைகள் மற்றும் புகார்கள் பூர்த்தி செய்யபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக,

  • புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற தோற்றம்
  • ஸ்கோடாவை தொடர்ந்து டைகனிலும் புதியதாக 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இடம்பெறலாம்
  • பனோரமிக் சன்ரூஃப்
  • ட்ரைவர் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருக்காக புதிய டிஜிட்டல் டிஸ்பிளே
  • முன் மற்றும் பின்புற சென்சார்களுடன் கூடிய 360 டிகிரி கேமரா
  • எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக்
  • மசாஜ் வசதி கொண்ட பின்புற இருக்கைகள்

உள்ளிட்டவையும் வழங்கப்படலாம். இதன் மூலம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் தொடர்ந்து அதிகரித்து வரும் போட்டித்தன்மையை சமாளிக்கும் அளவிற்கு டைகன் ஃபேஸ்லிப்ஃட் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Taigun Facelift: புது லுக், மசாஜ் சீட், கூடுதல் அம்சங்கள், அப்க்ரேடட் வசதிகள் - டைகனின் ஃபேஸ்லிஃப்ட் மீதான எதிர்பார்ப்புகள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வருமா?

ஆம், ஸ்கோடாவைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் புதிய 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MG Car Offers: 3.70 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. மார்ச் மாத ஆஃபர் தந்த MG Car நிறுவனம்!
MG Car Offers: 3.70 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. மார்ச் மாத ஆஃபர் தந்த MG Car நிறுவனம்!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
Volkswagen Offers: நாங்களும் தள்ளுபடி தருவோம்.. 3.50 லட்சம் ரூபாய் ஆஃபர் அறிவித்த வோக்ஸ்வேகன்!
Volkswagen Offers: நாங்களும் தள்ளுபடி தருவோம்.. 3.50 லட்சம் ரூபாய் ஆஃபர் அறிவித்த வோக்ஸ்வேகன்!
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget