மேலும் அறிய

Taigun Facelift: புது லுக், மசாஜ் சீட், கூடுதல் அம்சங்கள், அப்க்ரேடட் வசதிகள் - டைகனின் ஃபேஸ்லிஃப்ட் மீதான எதிர்பார்ப்புகள்

Volkswagen Taigun Facelift 2026: ஃபோக்ஸ்வாகன் டைகன் மாடலின் பேஸ்லிஃப்ட் எடிஷனில், எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Volkswagen Taigun Facelift 2026: ஃபோக்ஸ்வாகன் டைகன் கடந்த 2021ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட்களை பெற உள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டைகன் ஃபேஸ்லிஃப்ட்:

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யுவி ஆன டைகன் கார் மாடல் கடந்த 2021ம் ஆண்டு, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, முதல்முறையாக அந்த காருக்கான ஃபேஸ்லிஃப்ட் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விரைவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எடிஷனானது தனது ப்ளாட்ஃபார்ம், இன்ஜின் மற்றும் பெரும்பாலான தொழில்நுட்பங்களை ஸ்கோடா குஷக் உடன் பகிர்ந்துகொள்கிறது. இதன் காரணமாக புதிய டைகன் ஃபேஸ்லிஃப்டானது, குஷக்கிலிருந்து மிகப்பெரிய தாக்கத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரும் சந்தைப்படுத்தலுக்குப் பிறகு முதன்முறையாக அண்மையில் தான் ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேடை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய டைகனில் என்ன அம்சங்கள் மற்றும் வசதிகளை எதிர்பார்க்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

புத்துயிரூட்டப்பட்ட ஸ்டைலிங்

காலங்களை கடந்தும் போட்டியாளர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக, டைகன் தனித்துவமான டிசைனை கொண்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகள் பழமையான டிசைன் என இப்போது கூறினாலும் யாரும் நம்பமாட்டார்கள் என்றாலும், ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் மேம்படுத்தப்பட்ட டிசைன் வழங்கப்பட உள்ளது. முன்பகுதியில் எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் உடன் கூடிய மறுவேலை செய்யப்பட்ட மற்றும் மெல்லிய க்ரில், ஒருங்கிணைக்கப்பட்ட கனெக்டட் பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள், பெரிய ஏர்-ட்ரம்கள் உடன் கூடிய மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. பின்பகுதியிலும் மேம்படுத்தப்பட்ட பம்பர், புதிய டிசைன் கொண்ட எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்படலாம். பக்கவாட்டில் உயரமான எஸ்யுவி சில்-அவுட், பாடி க்ளாடிங் மற்றும் ரூஃப் ரெயில் ஆகியவை, தற்போதைய மாடலிலிருந்து அப்படியே தொடரப்படும் என கூறப்படுகிறது.அதேநேரம், 17 இன்ச் அலாய் வீல்களுக்கு புதிய டிசைன் வழங்கப்பட வாய்ப்புள்ளது. 

புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்

தற்போதைய மாடலில் உள்ள அதே டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் அப்படியே ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் டைகனிலும் தொடர உள்ளது. அதேநேரம், புதியதாக 8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனானது, 1.0 லிட்டர் TSI இன்ஜினில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய ட்ரான்ஸ்மிஷனானது, அண்மையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்கோடா குஷக்கிலும் இடம்பெற்றது. இந்திய ஓட்டுனர் சூழலுக்கு ஏற்ப இந்த கியர்பாக்ஸ் ஆனது மெருகூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றை பெற முடியும் என கூறப்படுகிறது.

Taigun Facelift: புது லுக், மசாஜ் சீட், கூடுதல் அம்சங்கள், அப்க்ரேடட் வசதிகள் - டைகனின் ஃபேஸ்லிஃப்ட் மீதான எதிர்பார்ப்புகள்

புதிய டைகன் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின் விவரங்கள்:

இன்ஜின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்
ட்ரான்ஸ்மிஷன் 6-ஸ்பீட் மேனுவல்/8 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் (புதியது) 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச்
ஆற்றல் (PS) 115 150
டார்க் (Nm) 178 250

புதிய வசதிகளின் பட்டியல்:

மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அதிக அம்சங்களை கொண்ட கார்களின் பட்டியலில் ஃபோக்ஸ்வாகனின் டைகனிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. ஆனாலும், மேம்படுத்துவதற்கு இன்னும் சில குறைகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் குறைகளை செவி கொடுத்து கேட்டு, தன்னை மேம்படுத்திக் கொள்ள ப்ராண்ட் தயாராக இருப்பதாக தெரிகிறது. அதன்படி,  டைகனின் ஃபேஸ்லிஃப்டில் பனோரமிக் சன்ரூஃப், ட்ரைவர் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருக்காக புதிய டிஜிட்டல் டிஸ்பிளே ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன் மற்றும் பின்புற சென்சார்களுடன் கூடிய 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் ஆகியவை வழங்கப்படலாம்.

மசாஜ் வசதியுடன் கூடிய பின்புற இருக்கைகள்:

மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் சிறந்த பயண அனுபவத்தை வழங்கக் கூடிய டைகன், பின்புற இருக்கை பயணிகளுக்கும் அதே சொகுசை வழங்குகிறதா?அவர்களையும் கருத்தில் கொண்டு அங்கு ஸ்கோடா குஷக்கில் இருப்பதை போன்ற, மசாஜ் சீட்டை ஃபோக்ஸ்வாகன் வழங்கலாம். இந்த காரின் மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதோடு, பெரும்பாலும் இரண்டாவது இருக்கையிலேயே அமர விரும்பும் வாடிக்கையாளர் பிரிவின் கவனத்தையும் ஈர்க்கும். 

புதிய வண்ண விருப்பங்கள்:

நவீன அம்சங்கள் மற்றும் கொண்டாடக்கூடிய ட்ரைவிங் அனுபவத்தை வழங்குவதால் மட்டுமே, போட்டியாளர்களை சமாளித்து விட முடியாது. தோற்ற அடிப்படையிலும் கவனத்தை ஈர்க்க, வண்ண விருப்பங்கள் அவசியம். இந்த பிரச்னையை கையாளவே, இளம் தலைமுறையினரை கையாளும் விதமாக சில புதிய வண்ண விருப்பங்களை அறிவிக்கலாம். ஆனால், என்ன மாதிரியான விருப்பங்கள் கிடைக்கக் கூடும் என்பதை உறுதிபட கூற முடியவில்லை.

Taigun Facelift: புது லுக், மசாஜ் சீட், கூடுதல் அம்சங்கள், அப்க்ரேடட் வசதிகள் - டைகனின் ஃபேஸ்லிஃப்ட் மீதான எதிர்பார்ப்புகள்

புதிய விலை வரம்பு என்ன?

தற்போதைய எடிஷன் டைகன் கார் மாடலின் விலை வரம்பானது 11.4 லட்சத்தில் தொடங்குகிறது. புத்துயிரூட்டப்பட்ட புது எடிஷனின் தொடக்க விலையானது ரூ.12 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் உள்நாட்டு சந்தையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உள்ளூரில் இந்த கார் மாடலனாது மிகவும் போட்டித்தன்மை மிக்க மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, விக்டோரிஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் டாடா சியாரா ஆகிய மாடல்களுடன் டைகன் போட்டியிடுகிறது. இதுபோக புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் மற்றும் கோடா குஷக்கிடமிருந்தும் கடும் போட்டிகளை எதிர்கொள்ளும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget