Tata Curvv EV vs rivals: போட்டியாளர்களை சமாளிக்குமா டாடா கர்வ்வ்? விலை, செயல்திறன், அம்சங்களின் ஒப்பீடு இதோ..!
Tata Curvv EV vs rivals: டாடா கர்வ்வ் மாடலின் செயல்திறன், விலை ஆகியவற்றை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எப்படி இருக்கிறது என்பதை அறியலாம்.
Tata Curvv EV vs rivals: போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் டாடா கர்வ்வ் கார் மாடல், எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா கர்வ்வ் vs போட்டியாளர்கள்:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாடா நிறுவனத்தின் கர்வ்வ் மின்சார எடிஷன் அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்க விலை ரூ.17.49 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ.21.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பட்டியலின் மூலம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்சைஸ் எஸ்யுவி செக்மெண்ட் பிரிவில், MG ZS EV, மஹிந்திரா XUV400 மற்றும் Tata Nexon EV ஆகியவற்றுடன், டாடா கர்வ்வ் மாடல் போட்டியிடுகிறது. இதனால், அந்த மாடல்களுடன் ஒப்பிடும்போது புதிய டாடா கர்வ்வின் செயல்திறன், விலை,வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்களை இந்த தொகுப்பில் ஒப்பீடு செய்து அறியலாம்.
Tata Curvv EV vs போட்டியாளர்கள்: வெளிப்புற பரிமாணங்கள்
டாடா கர்வ்வ் EV vs போட்டியாளர்கள்: பரிமாணங்கள் | ||||
---|---|---|---|---|
வடிவமைப்பு | கர்வ்வ் ஈ.வி | ZS EV | XUV400 | நெக்சன் EV |
நீளம் (மிமீ) | 4310 | 4323 | 4200 | 3994 |
அகலம் (மிமீ) | 1810 | 1809 | 1821 | 1811 |
உயரம் (மிமீ) | 1637 | 1649 | 1634 | 1616 |
வீல்பேஸ் (மிமீ) | 2560 | 2585 | 2600 | 2498 |
கிரவுண்ட் கிளியரன்ஸ் (மிமீ) | 186-190 | 177 | 200 | 190-205 |
பூட் ஸ்பேஸ் (லிட்டர்) | 500 | 448 | 378 | 350 |
டர்னிங் ரேடியஸ் (மீட்டர்) | 5.35 | 5.6 | 5.3 | 5.3 |
டயர்கள் | 215/55 R18 | 215/55 R17 | 205/65 R16 | 215/60 R16 |
Tata Curvv EV vs போட்டியாளர்கள்: பவர் ட்ரெய்ன் விவரங்கள்
டாடா கர்வ்வ் EV vs போட்டியாளர்கள்: வரம்பு, பேட்டரி, செயல்திறன் | ||||
---|---|---|---|---|
கர்வ்வ் ஈ.வி | ZS EV | XUV400 | நெக்சன் EV | |
பேட்டரி அளவு (kWh) | 45-55 | 50.3 | 34.5-39.5 | 30-40.5 |
MIDC வரம்பு (kpl) | 502-585 | 461 | 375-456 | 325-465 |
சக்தி (hp) | 150-167 | 177 | 150 | 129-145 |
முறுக்கு விசை (Nm) | 215 | 280 | 280 | 215 |
மணிக்கு 0-100 கிமீ (வினாடிகள்) | 8.6-9 | 8.5 | 8.3 | 8.9-9.2 |
நிலையான சார்ஜர் (kW) | 7.2 | 3.3-7.4 | 3.3-7.2 | 3.3-7.2 |
சார்ஜிங் நேரம்* (மணிநேரம்) | 6.5-7.9 | 8.5-9 | 6.5-13.5 | 4.3-6 |
டாடா கர்வ்வ் EV vs போட்டியாளர்கள்: விலை
டாடா கர்வ்வ் EV vs போட்டியாளர்கள்: விலை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) | ||||
---|---|---|---|---|
Curvv EV | ZS EV | XUV400 | நெக்சன் EV | |
விலை (ரூ, லட்சம்) | 17.49-21.99 | 18.98-25.44 | 15.49-17.69 | 14.49-19.49 |
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கர்வ்வ் EV எடிஷனின் விலையை மிகச்சரியாக நிர்ணயித்துள்ளது. அதன் மூலம், ZS EV-ஐ விட அதன் விலை குறைவாக உள்ளது. மேலும் Nexon EV மற்றும் XUV400 உடன் எண்ட்ரி லெவல் மாடல்களுடனும் இணைகிறது. இதனால் டாடாவின் சமீபத்திய EV கொடுக்கும் பணத்திற்கு வர்த்தாக தெரிகிறது. அதேநேரம், இதன் சரியான ஆன்-ரோடு ஒப்பீடு அவசியமாக இருக்கும். தற்போதைய சூழலில், Tata Curvv EV அதன் போட்டியுடன் ஒப்பிடும் போது நிச்சயமாக ஒரு விளிம்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.