Innova Crysta: பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா...! க்ரிஸ்டாவிற்கு டஃப் கொடுக்கும் 4 மாடல்கள் - மைலேஜ், விலை
Toyota Innova Crysta Alternatives: இந்திய கார் சந்தையில் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலுக்கு மாற்றாக, மலிவு விலையில் கிடைக்கும் 4 கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Toyota Innova Crysta: டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலுக்கு மாற்றாக, கிடைக்கக் கூடிய கார் மாடல்களின் விலை மற்றும் மைலேஜ் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எம்பிவி பிரிவில், டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்டாவானது ஒரு லெஜண்டரி கார் மாடலாக திகழ்கிறது. இந்த பிரிவை நாடும் ஒவ்வொருவரின் பரிசீலனையில் வரும் முதல் கார் மாடலாகவும் உள்ளது. இது அந்த காரின் ஈடு இணையில்லாத, நம்பகத்தன்மை மற்றும் சொகுசு பயணத்திற்கான பாரம்பரியத்தை உணர்த்துகிறது. இந்த 7 சீட்டர் கார் மாடலானது 4 வேரியண்ட்களில், ரூ.18.85 லட்சத்தில் தொடங்கி ரூ.25.67 லட்சம் வரையிலான வரம்பில் விற்பனை செய்யப்படுகிறது. 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் டீசல் இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு சுமார் 13 முதல் 15 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
இன்னோவா க்ரிஸ்டாவிற்கான மாற்று
இந்தியாவில் குடும்பமாக பயணிக்க ஏதுவான கார் மாடலாகவும், நோகாமல் போக இன்னோவா சரியான தேர்வு என்றும் ஒரு வாக்கியம் உள்ளது. ஆனாலு, விலை, அளவு மற்றும் மைலேஜ் காரணிகளால் அனைத்து தரப்பினருக்கும் இன்னோவா அணுகக் கூடிய காராக இல்லை என்ற சில கருத்துளும் உள்ளன. அந்த வகையில் இன்னோவாவை தாண்டி வேறு சில ஆப்ஷனைகளை பரிசீலிக்க முயற்சிப்பவர்களுக்கு என, உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் நான்கு கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். அந்த பட்டியலில் டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ், மாருதி சுசூகி இன்விக்டோ, BYD eMAX 7 மற்றும் கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷன் ஆகியவை அடங்கும்.

க்ரிஸ்டாவிற்கு டஃப் கொடுக்கும் நான்கு மாடல்கள்
4. இன்னோவா ஹைக்ராஸ்
தோற்றம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் க்ரிஸ்டாவின் மேம்படுத்தப்பட்ட எடிஷனாக, ஹைக்ராஸ் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் உள்நாட்டில் சந்தைப்படுத்தியுள்ளது. 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த 7 சீட்டரின் விலையானது, சென்னையில் ரூ.18.92 லட்சத்தில் தொடங்கி ரூ.30.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையில் நீள்கிறது. இதில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் இன்ஜின் ஆனது, நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் வலுவான ஹைப்ரிட் எடிஷன்களில் கிடைக்கிறது. இயல்பான எடிஷனில் லிட்டருக்கு சுமார் 16 கிலோ மீட்டரும், ஹைப்ரிட் எடிஷன் சுமார் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக டொயோட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

3. மாருதி சுசூகி இன்விக்டோ
உள்நாட்டு சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் ப்ரீமியம் காராக இன்விக்டோ உள்ளது. டொயோட்டா ஹைக்ராஸ் கார் மாடலின் ரீபேட்ஜ் வெர்ஷனாகவே, 7 சீட்டர் இன்விக்டோ உள்நாட்டில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை வரம்பானது ரூ.24.97 லட்சத்தில் தொடங்கி ரூ.28.61 லட்சம் வரை நீள்கிறது. 2.0 லிட்டர் வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை கொண்டு, லிட்டருக்கு சுமார் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

2. BYD eMAX 7
இந்திய சந்தையில் BYD நிறுவனத்தின் e6 எம்பிவி கார் மாடலின் வெற்றியாளராக, முற்றிலும் மின்சார எம்பிவி கார் மாடலான eMAX 7 கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 55.4KWh மற்றும் 71.8KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, 420 தொடங்கி 530 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ட்ரிம்களில் கிடைக்கும் இந்த காரின் விலையானது, 26.90 லட்சத்தில் தொடங்கி 29.90 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS என பல அம்சங்களை கொண்டிருந்தாலும், உள்நாட்டில் இந்த கார் இதுவரை பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

1. கியா காரென்ஸ் க்ளாவிஸ்
கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார காரானது இந்திய சந்தைக்கான நவீன எம்பிவி மாடலாகும். 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, 404 கிலோ மீட்டர் தொடங்கி 490 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக கூறப்படுகிறது. மின்சார 7 சீட்டர் கார் மாடலின் விலையானது 17.99 லட்சத்தில் தொடங்கி ரூ.24.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிற்து. மொத்தம் 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS என பல அம்சங்களை கொண்டிருந்தாலும், உள்நாட்டில் இந்த கார் இதுவரை பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
























