Tata Curvv EV: ஃபைனலி களமிறங்கியது டாடா கர்வ்வ் EV கார்..! நிர்ணயித்த விலைக்கு வர்த்தா? விவரங்கள் உள்ளே..!
Tata Curvv EV Launched: டாடா நிறுவனத்தின் புதிய கர்வ்வ் மின்சார கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tata Curvv EV Launched: டாடா நிறுவனத்தின் புதிய கர்வ்வ் கார் மாடலின் விலை, இந்திய சந்தையில் ரூ.17.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வ்வ் மின்சார கார் அறிமுகம்:
டாடா நிறுவனத்தின் புதிய Curvv SUV கார் மாடல் இறுதியாக, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விலை 17 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் ICE எடிஷன் வரும் செப்டம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் எனவும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில், Curvv ஆனது ஹாரியருக்கு கீழே மற்றும் நெக்ஸானுக்கு மேலே இடம்பெறும். அதேநேரம், இது டாடா மோட்டார்ஸின் முதல் கூபே வடிவமைப்பு SUV ஆகும். எனவே சாய்வான பக்க சுயவிவரம் மற்றும் பின்புற ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. இது ATLAS பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது,
வடிவமைப்பு விவரங்கள்:
ஹூண்டாய் கிரேட்டா போன்ற போட்டியாளர்களுடன் பொருந்தும் வகையில், கர்வ்வ் வடிவமைப்புகளை கொண்டுள்ளது. அதன்படி, 4308 மிமீ நீளம், 1810 மிமீ அகலம், 1630மிமீ உயரமும் மற்றும் 2560மிமீ வீல்பேஸையும் கொண்டுள்ளது. EV எடிஷனில் 500லிட்டர் பூட் மற்றும் ஒரு ஃப்ரங்க் உள்ளது, அதே நேரத்தில் ICE பதிப்பில் பூட் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. Curvv ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் பரந்த தோள்களைக் கொண்டிருந்தாலும், EV மற்றும் ICE Curvv நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. ஒரு ரூஃப் டாப் ஸ்பாய்லர் மற்றும் பெரிய 18 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் உள்ளன.
இன்ஜின் விவரங்கள்:
கர்வ்வ் டீசல், டர்போ பெட்ரோல் மற்றும் EV பவர் ட்ரெயின்களை ஆப்ஷன்களை பெறுகிறது. பெட்ரோலில் இரண்டு பவர் ட்ரெய்ன்கள் இருக்கும். சிறப்பம்சமாக புதிய ஹைபரியன் 1.2லி டர்போ பெட்ரோல் இன்ஜின் 125 பிஹெச்பி மற்றும் 225 என்எம் டார்க் கொண்டது. அதே சமயம் நெக்ஸானில் உள்ளதைப் போல 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் ஆற்றலை உற்பத்தி செய்யும், நிலையான 1.2லி டர்போ இன்ஜினும் இதில் தொடர்கிறது . கியர்பாக்ஸ் விருப்பங்களில் டிசிஏ டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளது. 1.5லி டீசல் இன்ஜினும் உள்ளது. இதில் ஒரு மேனுவல், டிசிஏ ஆட்டோமேட்டிக் ஆப்ஷனைப் பெறுவீர்கள்.
கர்வ்வ் பேட்டரி பேக் விவரங்கள்:
இறுதியாக EV எடிஷன் இரண்டு பேட்டரி பேக்களுடன் வருகிறது. டாப் வேரியண்டில் 55kWh பேட்டரி பேக்குடனும், ஸ்டேண்டர்ட் எடிஷன் 40.5kWh பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளது. இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 585 கிமீ தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களும் ஒற்றை மின்சார மோட்டாருடன் வருகின்றன.
அம்சங்கள் என்ன?
கர்வ்வ் மின்சார காரில் உள்ள அம்சங்களைப் பற்றி பேசுகையில், இதில் 12.3 அங்குல தொடுதிரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைகையுடன் இயங்கும் டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், சாய்ந்த பின் இருக்கை, பவர்ட் ஓட்டுனர்கள் இருக்கை மற்றும் இரட்டை காற்றோட்டமான இருக்கைகள், Adas நிலை 2, பவர்ட் ஹேண்ட்பிரேக் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.